சிரிப்பாய் சிரிக்குது சிசிடிவி கேமிரா ஊழல்..! அம்பலபடுத்திய மார்க்சிஸ்ட்..கண்டுகொள்ளாத திமுக தலைவர் ஸ்டாலின்.

By T BalamurukanFirst Published Aug 20, 2020, 11:34 PM IST
Highlights

Exclusive:

தமிழகத்தில் 12524 ஊராட்சிகளுக்கு சிசிடிவி கேமரா வாங்கியதில் 372கோடியே 84லட்சத்து 46600 ஊழல் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் அதை  லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மாவட்ட செயலாளர் கே.வீரபாண்டி ஆதாரங்களுடன் புகார் செய்திருப்பது அதிமுக ஆட்சிக்கு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
 

தமிழகத்தில் 12524 ஊராட்சிகளுக்கு சிசிடிவி கேமரா வாங்கியதில் 372கோடியே 84லட்சத்து 46600 ஊழல் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் அதை  லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மாவட்ட செயலாளர் கே.வீரபாண்டி ஆதாரங்களுடன் புகார் செய்திருப்பது அதிமுக ஆட்சிக்கு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டம் ஒழுங்கை கண்காணித்திட  தமிழகம் முழுவதும் 12524 ஊராட்சிகளுக்கும் ,385 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் சிசிடிவி கேமரா வாங்கப்பட்டுள்ளது.ஒரு பஞ்சாயத்திற்கு வாங்கப்பட்ட சிசிடிவியின் விலை ரூ58840. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 445 ஊராட்சிகளுக்கும்,12ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சிசிடிவி வாங்கி பொருத்தியிருக்கிறார்கள். மாவட்டத்தில் உள்ள 445ஊராட்சிகளுக்கும்,12 ஊராட்சி ஒன்றியத்திற்கும் மொத்தம் 457 சிசிடிவி கேமிராக்கள்  வாங்கியிருக்கிறார்கள்.

திருச்சி ஜாய் ஏஜன்சியில் இருந்து சிசிடிவி கேமரா 457 யூனிட்  வாங்கியிருக்கிறார்கள்.
சிசிடிவி கேமரா ஒன்று ரூ58840 விலையில் 457சிசிடிவி கேமரா ரூ26கோடியே75லட்சத்து2780க்கு வாங்கியிருக்கிறார்கள்.இதனை வாங்குவதற்க்கு மூன்று விலை ஒப்பந்த பட்டியல் பெற்றிருக்கிறார்கள்.இந்த ஒப்பந்த பட்டியல்களில் தேதி குறிப்பிடவில்லை.

திருச்சியில் டூ வயலூர் பிரதான சாலை முகவரியில் ஜாய் ஏஜன்சி இயங்கி வருகிறது. இந்த ஏஜென்சி லெட்டர் பேடுபோல் இருக்கிறது. ஏதோ அரசியல் பின்னணியில் இயங்கும் கம்பெனிபோல் இருக்கிறது. அதனால் தான் ஒரு யூனிட் ரூ58,840க்கும்,ஈரோடு செல்வா என்டர்பிரைசஸ் ரூ62,270 ம் என விலை ஒப்பந்த பட்டியல் கொடுத்திருக்கிறார்கள்.இன்னொரு கொட்டேசன் கோயம்புத்தூர் எம்.எம்.எம்.ஏ என்டர்பிரைசஸ் ரூ65,950 க்குகொட்டேசன் கொடுத்திருக்கிறார்கள்.இதில் திருச்சி ஜாய் ஏஜன்சியில் சிசிடிவி 457வாங்கியிருக்கிறார்கள் என்பது உறுதியானது.இந்த சிசிடிவி கேமராக்கள் 79.9செ.மீ.லெட் டெலிவிஷன் உள்ளிட்டவை சீன கம்பெனியில் வாங்கியிருக்கிறார்கள்.டிசிஎல் கிங் எலக்டிரிக்கல்ஸ் அப்ளையன்ஸ் (huizhou) சீன கம்பெனி லிமிடெட்மிருந்து மகாராஷ்ட்ரா மாநிலம். மும்பை டிடிஇ டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள்.

வாங்கப்பட்ட சிசிடிவியில் ஏதாவது குறைபாடு இருந்தால் "இன்பினிட்டி சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்" ஹரியானா விற்க்கு புகார் செய்ய வேண்டுமாம்.மகாராஸ்டிரா கம்பெனி இவர்களிடமிருந்து சென்னை ஹைச்1 ஃபோகஸ் எலக்டிரானிக்ஸ் கம்பெனி வாங்கி திருச்சி ஜாய்க்கு கொடுத்துள்ளார்கள்.திருச்சி ஜாய் ஏஜன்சியிடமிருந்து சிவகங்கை மாவட்ட 445 ஊராட்சி மன்றத்திற்க்கும்,12 ஊராட்சி ஒன்றியத்திற்க்கும் ஆக மொத்தம் 457 சிசிடிவி வாங்கியிருக்கிறார்கள்.இவற்றுக்கு ஒர் ஆண்டு மட்டுமே வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது..இதில் கோடி,கோடியாக ஊழல் நடந்துள்ளது.

 கொரானாவால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இது போன்ற சூழ்நிலையில் தமிழ்மாநிலம்முழுவதும் சிசிடிவி கேமரா வாங்கியது தவறாகும்.வாங்கிய சிசிடிவி கேமரா குறித்து மொத்த கொள்முதல் கடையில் கேட்டோம்.அவர் கூறியது பிரமிப்பைஏற்படுத்தியது.ஆயிரக்கணக்கில் எண்ணிக்கையில் வாங்கும்போது இதன் விலை ரூ22ஆயிரம் முதல் ரூ30ஆயரத்திற்க்கு கொடுக்க முடியும்.ஐந்து ஆண்டுகள் வாரன்டி கொடுக்க முடியும் என எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்கள்.ஒரு சிசிடிவி கேமரா,லெட் டிவி விலை ரூ30ஆயிரமாகும்.ஆனால் அரசு வாங்கியதோரூ58840 ஆகும்.12,909 சிசிடிவி வாங்கப்பட்டுள்ளது.ஒரு சிசிடிவியில் மட்டும்ரூ28,840 வீதம் ஊழல் நடந்துள்ளது.ஆக மொத்தம் தமிழ்நாடு அளவில் 372கோடியே84லட்சத்து660ஊழல் புரிந்திருக்கிறார்கள்.சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 457 சிசிடிவி வாங்கியதில் ரூ12கோடியே85லட்சம் ஊழல் நடந்துள்ளது.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும்.மேலும் சிவகங்கை மாவட்டத்தில் சட்டவிரோத கொள்ளையும்,ஊழலும் அமோகமாக நடந்துள்ளது.கொரோனா காலத்திலும் ,தற்போதும் விவசாயிகள்,ஏழை எளிய மக்கள் சொல்லன்னா துன்ப துயரங்களோடு வாழ்கிறார்கள்.இந்தநிலையில் தமிழகத்தில் அதிமுக அரசு ஊழல் முறைகேட்டில் அமோகமாக அரங்கேற்று வருகிறது.சிவகங்கை மாவட்டத்தில் 445ஊராட்சிகளுக்கு இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட தகவல் கொரோனா விழிப்புணர்வு பலகை வைத்திருக்கிறார்கள்.இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 235 கொரோனா விழிப்புணர்வு பலகை வைத்திருக்கிறார்கள்.இந்த தகவல்பலகைக்கு 29லட்சத்து08ஆயிரத்து685பணம் பட்டுவாடா செய்திருக்கிறார்கள்.


இந்த ஒரு தகவல் பலகை ரூ12,377ன்படி பட்டுவாடா நடந்திருக்கிறது.ஒரு தகவல் பலகையின் விலை ரூ3000மட்டுமே.இதில் மட்டும்ரூ18கோடியே75லட்சத்து 4000 அளவிற்க்கு மாவட்ட அளவில் முறைகேடு நடந்திருக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமால் காலம் கடத்தி வந்தனர்.ஊராட்சி மன்றத் தலைவர் இல்லாத காலத்தில் ஊராட்சிகளில் பெரும் மோசடி நடந்திருக்கிறது.
ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் இந்த ஊழலை ஆதாரப்பூர்வமாக வெளிக் கொண்டு வந்து அம்பலத்திற்கு  கொண்டுவந்த விபரம் உள்ளது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில்  மாவட்ட அளவில்ரூ12கோடி ஊழல் நடந்ததாக அரசின் சமூக தணிக்கை கண்டறிந்ததை தற்போது வரைக்கும் நடவடிக்கை கிடையாது.உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதி வந்தபின்பும் இவர்களுக்கே தெரியாமால் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்க்கும் ரூ60லட்சம் வீதம் 12ஊராட்சி ஒன்றியத்திற்கும் கிரிமிநாசினி கொடுத்திருக்கிறார்கள்.ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கோ,ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கோ தெரியாமால் சகல முறைகேடுகளும் அரங்கேறிவருகிறது.சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறை 40க்கு மேற்பட்ட பகுதிகளுக்கு உத்திரவிட்டுள்ளனர்.இந்த உத்திரவில் 0.9மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே உபரிமண்அள்ளி நிலத்தை சீர் செய்திட வேண்டும் என போட்ட உத்திரவு மீறி 50அடி ஆழத்திற்க்கு அள்ளுகிறார்கள்.இது சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது.மக்களுக்கு விரோதமான சட்டவிரோதமான செயல் காவல்துறை பாதுகாப்போடு மாவட்ட நிர்வாக ஆசியோடு நடைபெற்று வருகிறது.இது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும். 

 மாவட்ட ஊராட்சி உதவி  இயக்குனர் விஜயநாதனிடம் சிசிடிவி ஊழல் முறைகேடு குறித்து கேட்டபோது.."
 உயர் அதிகாரி உத்திரவுப்படி செயல்படுத்தியிருக்கிறோம்.தரமான பொருள் வாங்கியிருக்கிறோம்.என்கிறார்.

இந்த ஊழலுக்கு துணை நின்ற அதிகாரி யார்? சாய் என்டர்பிரைசஸ் கம்பெனியின் பின்னணி என்ன என்பதை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் அமைச்சர் வேலுமணி துறையில் நடக்கும் ஊழல்களை மட்டுமே பேசுகிறார். அப்ப மற்ற துறைகள் எல்லாம் ஊழல் நடைபெறவில்லையா? எனவு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

click me!