தேர்தலில் தனித்து நில்லுங்கள்... டெபாசிட் வாங்கி ஆண்மையை நிரூபியுங்கள்... பாஜகவுக்கு அதிமுக பகிரங்க சவால்.!!

By Asianet TamilFirst Published Aug 20, 2020, 9:22 PM IST
Highlights

வெறும் வாய்ப்பேச்சில் காட்டும் வீரத்தை தமிழ்நாட்டில் தனித்து நின்று டெபாசிட்டாவது வாங்கி தங்கள் ஆண்மையை நிரூபிக்கவேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு அதிமுக ஐ.டி. விங் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழா 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இந்து அமைப்புகள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தாக்கம் இருப்பதால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால், தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து அமைப்புகளும் பாஜகவும் பேசிவருகிறது. மேலும் அதிமுக அரசையும் பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள்.


 இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்து ட்விட்டரில் தகவல்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்ட பதிவில், “சென்னையிலும் நேற்றிலிருந்து டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டது. இதனால் கொரோனா வராதாம். ஆனால், விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 5-10 பேர் சமூக இடைவெளியோடு விசர்ஜனம் செய்தால் கொரோனா வந்துடுமாம். பகுத்தறிவு. கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" என்று ஹெச்.ராஜா.

நோட்டாவோடு போட்டி போடுபவர்களின் தனிப்பட்ட மதவெறிக்காக எல்லாம் தொற்றுநோய்க்காலத்தில் தமிழக அரசு மக்களைப் பணயம் வைக்காது!

வெறும் வாய்ப்பேச்சில் காட்டும் வீரத்தை தமிழ்நாட்டில் தனித்து நின்று டெபாசிட்டாவது வாங்கி தங்கள் ஆண்மையை நிரூபிக்கவேண்டும்! https://t.co/4B9xZ1n5T3

— AIADMK IT WING (@AIADMKITWINGOFL)


ஹெச்.ராஜாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் அதிமுக ஐ.டி. விங் ஹெச்.ராஜாவுக்கு கடுமையாக எதிர் வினையாற்றியிருக்கிறது. இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நோட்டாவோடு போட்டி போடுபவர்களின் தனிப்பட்ட மதவெறிக்காக எல்லாம் தொற்றுநோய்க்காலத்தில் தமிழக அரசு மக்களைப் பணயம் வைக்காது! வெறும் வாய்ப்பேச்சில் காட்டும் வீரத்தை தமிழ்நாட்டில் தனித்து நின்று டெபாசிட்டாவது வாங்கி தங்கள் ஆண்மையை நிரூபிக்கவேண்டும்!”

click me!