பாக்கெட் பாக்கெட்டாக காண்டம்... அடுக்கடுக்காக ஆபாச சிடி.... சிக்கிய அமைச்சர்! ரெய்டில் சிபிஐ அதிகாரிகள்....

By sathish kFirst Published Aug 18, 2018, 3:50 PM IST
Highlights

34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீகாரில் காப்பகத்தில் தங்கியிருந்த 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள தொண்டு நிறுவனம் சார்பில் காப்பகம் நடத்தப்பட்டு வந்தது. இதில், ஆதரவற்ற சிறுமிகள் பலர் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் 34 பேர் முக்கிய பிரமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் பிஹார் அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் அடிக்கடி அந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளின் அறைக்குச் சென்று வருவர் என்று ரவிகுமாரின் மனைவி ஷிவக்குமாரி புகார் தெரிவித்தார். இதையடுத்து மஞ்சு வர்மா பதவி விலகவேண்டும் என்று பிஹாரில் பல்வேறு அமைப்பினர் போர்க்கொடி தூக்கியதால்  சம்பவத்திற்கு பொறுப்பேற்று சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மா கடந்த வாரம் ராஜினாமா செய்தார். 

இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை பிஹார் அரசு அமைத்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்த காரணத்தால் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.  இந்நிலையில்,  மஞ்சு வர்மாவுக்கு சொந்தமான பாட்னாவில் உள்ள 3 வீடுகள், பிரஜேஷ் தாக்குருக்குச் சொந்தமான 7 இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் மோதிகாரி, பகல்பூரில் உள்ள வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், பாக்கெட் பாக்கெட்டாக காண்டம், ஆபாச கேசட்டுகள், பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாக   கூறப்படுகிறது. 

click me!