தமிழகத்தின் ஏராளமான நிறுவனங்கள் சிக்குகின்றன:அதிரடி நடவடிக்கையில் இறங்கும் சிபிஐ...

By Selvanayagam PFirst Published Jan 7, 2020, 10:15 PM IST
Highlights

 
கடந்த 2014-15ம் ஆண்டுகளில் ஹாங்காங் வங்கி கணக்குகளுக்கு கருப்புபணம் அனுப்பிய 51 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. 

அந்த நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்தவைதான் அதிகமாம். கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதற்கு ஓரளவு பலனும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், 2014-15ம் ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,038 கோடி கணக்கில் வராத பணத்தை ஹாங்காங் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்ததாக 51 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.


இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தம் 51 நிறுவனங்கள் கணக்கில் வராத கருப்பு பணம் ரூ.1,038 கோடியை ஹாங்காங் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி உள்ளன. 

இதற்கு 3 பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த அடையாளம் தெரியாத அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய 3 வங்கிகளின் கிளைகளில் மொத்தம் 51 நடப்பு கணக்குகளை 48 நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

இறக்குமதிக்காக முன்பணம் அனுப்புவதாக 24 கணக்குகள் வாயிலாக ரூ.488.39 கோடியும், இந்திய சுற்றுலா பயணிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு என்று 27 கணக்குகள் வாயிலாக ரூ.549.95 கோடியும் ஹாங்காங் வங்கி கணக்குகளுக்கு அந்த நிறுவனங்கள் பரிமாற்றம் செய்துள்ளன. இந்த 51 நிறுவனங்கள் அதிகமானவை தமிழகத்தை சேர்ந்தவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!