குட்கா பணம் யாருக்கெல்லாம் போச்சு..? அடுத்து சிக்கும் முக்கிய புள்ளி! பேஸ்மென்ட் ஆடி போன ஆளுங்கட்சி...!

By thenmozhi gFirst Published Sep 6, 2018, 7:38 PM IST
Highlights

குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலிஸ் கமிஷனர்  ஜார்ஜ், மேலும் இதில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் என 35 இடத்தில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலிஸ் கமிஷனர்  ஜார்ஜ், மேலும் இதில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் என 35 இடத்தில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
இதனால் இதில் யாரெல்லாம் சிக்க போகிறார்கள்..? அமைச்சர் முதல் முக்கிய அதிகார்கள் வரை ஆளும் கட்சியே அதிர்ந்து போயுள்ளது. இந்த வழக்கில் முக்கிய நபராக  உள்ள மாதவ ராவ்வின் டைரி மற்றும் அவரின் வாக்குமூலம் அடிப்படையில் வழக்கு விசாரணை அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளது.

இந்த விசாரணையில், காவல் துறை மட்டுமல்லாது உணவு பாதுகாப்புத்துறை,கலால்துறைக்கும் தொடர்பு  உள்ளது தெரிய வந்துள்ளது. இதில் சிக்கிய குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் மற்றும் அதிகாரிகள் உமாசங்கர், பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரிடம் தொடர் விசாரணை நடைப்பெற்று வருகிறது. இதற்கு அடுத்த படியாக யார் மீது சிபிஐ சோதனை நடைபெறுமென பெரும் அதிர்ச்சியில் உள்ளதுஆளுங்கட்சி. இந்நிலையில் இது குறித்து ஒரு சிபிஐ அதிகாரி சில தகவல்களை  தெரிவிதுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள் தடையின்றி விற்க, பல முக்கிய புள்ளிகளுக்கு மாமூல் கொடுக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தையும் மாதவராவ் கொடுத்த வாக்குமூலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள், அமைச்சர், முன்னாள் அமைச்சர் என சிலரின் பெயர்கள் உள்ளன என்றும் கைப்பற்றபப்பட்ட டைரியில் யாருக்கெல்லாம் எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்த அனைத்து விவரமும் கண்டறியப்பட்டு உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சரின் உறவினர் தான், குட்கா விற்பதில் முக்கிய டீலராக இருந்துள்ளார். இவர் மாதவராவ் நிறுவனம் மட்டுமின்றி, வேறு சில குட்கா நிறுவனத்திடம் இருந்தும் குட்கா பெற்று டீலராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஆளுங்கட்சிக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு நபரை கண்காணித்து வருவதாகவும் விரைவில் அவர் வீட்டில் சோதனை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

குட்கா வழக்கில் கமிஷன் வாங்கிய முக்கிய அதிகாரிகள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்கள் வாங்கி உள்ளதாகவும் தகவல் கிடைத்து உள்ளதாம்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலருக்கு ஐ.பி.எஸ் அதிகாரிககளே மிகவும் விசுவாசமாக இருந்துள்ளனர். அதுமட்டுமல்ல போயஸ் கார்டன் முதல் அதிமுக வின் முக்கிய புள்ளிகள் வரை இதில் தொடர்புடையதாக தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக இன்று வரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 22 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார். ஆக மொத்தத்தில் குட்கா விவகாரத்தில் இனி சோதனைகள்  சூடு பிடிக்கும் என தெரிகிறது. 
 

click me!