கருணாநிதியில் உடல்நிலையில் தற்போது சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதியில் உடல்நிலையில் தற்போது சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலத்திற்கு மேல், உடல் நல குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவ மனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரை மருத்துவ மனையில் அனுமதித்தது முதல், பல மாநில, மற்றும் தேசிய அளவிலான, அரசியல் தலைவர்கள், மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரடியாக வந்து இவரின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.
இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கருணாநிதியில் உடல் நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வயோதிகம் காரணமாக இவருடைய உடல் உறுப்பை இயக்க வைப்பது மிகவும் சவாலான விஷயமாக இருப்பதாகவும், இதனால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் 24 மணி நேரத்திற்கு பிறகே எதுவும் கூறமுடியும் என்பது போல் கூறப்பட்டுள்ளது, தொடர்ந்து சிகிச்சை கொடுப்பதன் மூலம் மீண்டும் கருணாநிதியின் உடல் நிலை சீராக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவரின் உடல் உறுப்பு இயக்கத்தை கவனிக்க வேண்டி உள்ளதால், மருத்துவ குழுவினர் அவரை தீவிரமாக கவனித்து வருகிறார்கள்.
கருணாநிதியில் உடல் நிலையில் தற்போது மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், காவிரி மருத்தவமனை வளாகம் பரபரப்பில் உள்ளது. திமுக தொண்டர்களுக்கும் மருத்துவமனை முன்பு குவிய துவங்கியுள்ளனர்.