"கை விரித்த காவேரி ஹாஸ்பிடல்"...! 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும்...!

First Published Aug 6, 2018, 7:06 PM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டது காவேரி மருத்துவமனை.

திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டது காவேரி மருத்துவமனை.

இன்றுடன் 10 ஆவது நாளாக சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் உடல் நிலையில் இன்று மதியம் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியானது.கடந்த 27 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் திடீர் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அதன்பின், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் கருணாநிதி.

காவேரி மருத்துவமனை முன்பாக, எராளனமான தொண்டர்கள் கூடி இருந்தனர். இந்நிலையில், இன்று மதியம் கலைஞரின் உடல் நிலை   மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி  இருந்தது 

இதனை  தொடர்ந்து, கலைஞரின் வாரிசு மற்றும் உறவினர்கள் காவேரி மருத்துவமனை விரைந்தனர். முதல் முறையாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார். அவரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன் மு.க தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதியும் விரைந்தனர்.

இதற்கிடையில் சற்று முன் வெளியான காவேரி மருத்துவமனை அறிக்கையில், கலைஞரின் உடல் நிலை மோசமாக  உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என காவேரி   மருத்துவமனை கை விரித்து விட்டது என்பது  குறிப்பிடத்தக்கது. 

click me!