காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது … கடுமையாக எதிர்க்கிறார் சித்த ராமையா …

First Published Feb 18, 2018, 8:52 AM IST
Highlights
Cauvery Management committee not formed siddaramaiah


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தேவையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அது குறித்து எதுவும் கூறப்படவில்லை என்றும் தெரிவித்த  கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா, காவிர மேலாண்மை வாரியம் அமைப்பதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என தெரிவித்தார்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 192 டி.எம்.சி.யில் 177.25 டி.எம்.சி.யாக குறைத்து உச்சநிதிமன்றம்  நேற்று முன்தினம் தீர்ப்பு கூறி இருந்தது. இந்த தீர்ப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டாலும், 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க  வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்தது.

காவிரி நதிநீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது குறித்து  கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றம்  கர்நாடக அரசு சார்பில் கூறிய கருத்துகளை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். சில கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இந்த பிரச்சினையில் வழங்கியுள்ள தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்கிறது என தெரிவித்தார்.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கர்நாடக அரசு எதிர்ப்பதாக தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் கர் நாடக அரசுக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.

ஒருவேளை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தாலும், அது தன்னிச்சையான முடிவாக இருக்கக்கூடாத என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முன்பாக 4 மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் சித்த ராமையா தெரிவித்தார்.

4 மாநிலங்களின் கருத்துகளையும் மத்திய அரசு கேட்க வேண்டும். ஏதோ ஓரிரு மாநிலங்களின் கருத்துகளை கேட்டுவிட்டு மட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துவிடக்கூடாது என சித்த ராமையா திட்டவட்டமாக தெரிவித்தார்..

click me!