
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், மத்திய அரசு திட்டமிட்டபடி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யுமா ? அல்லது கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நிறைவடையும்வரை 2 வார கால அவகாசம் பேக்குமா எனப்து இன்று தெரியி வரும்.
காவிரி இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விரிவான செயல்திட்டம் தொடர்பான வரைவை மே 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை மத்திய அரசு வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த விசாரணையின்போது மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய இன்னும் 2 வாரங்கள் அவகாசம் கேட்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த வாரம் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய 2 வார காலம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பின்னர் அந்த மனு திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.