சாதிய மோதல்கள், மத வெறுப்பு பிரச்சாரங்களுக்கு ஒரு போதும் தமிழகத்தில் இடமில்லை.. பகிரங்கமாக எச்சரித்த ஸ்டாலின்.

Published : Mar 10, 2022, 10:56 AM IST
சாதிய மோதல்கள், மத வெறுப்பு பிரச்சாரங்களுக்கு ஒரு போதும் தமிழகத்தில் இடமில்லை.. பகிரங்கமாக எச்சரித்த ஸ்டாலின்.

சுருக்கம்

இந்ந மாநாட்டிற்கு தலைமை வகித்துள்ள முதலைச்சர் அதில் உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-  தமிழகத்தில் மக்கள் விரும்பிய ஆட்சி நடைபெற்றுவருகிறது,  சட்டம் ஒழுங்கு விஷயத்தில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிவர், போதைப்பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் என பலதரப்பட்ட குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. 

சாதிய மோதல்கள் மற்றும் மத வெறுப்பு பிரச்சாரங்களை ஒருபோதும் இந்த அரசு அனுமதிக்காது என தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் எச்சரித்துள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறையினர் மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் இவ்வாறு கூறினார். 

சட்ட ஒழுங்கு பிரச்சனை: 

திமுக ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் நிறைவடைந்துள்ளது. கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வரும் ஒரு நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. அதேநேரத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது திமுக அரசுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. மேலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. சட்ட ஒழுங்கை பொறுத்தவரையில் கூலிப்படை கொலைகள், அரசியல் பழி வாங்கும் கொலைகள் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இவற்றை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, போலீசாரும் குற்றப் பின்னணி உள்ளவர்களை கண்காணிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

காவல் துறை, மாவட்ட ஆட்சியர் மாநாடு: 

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு இன்று தொடங்கியுள்ளது. இந்த மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது தளத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது. இம் மாநாட்டில் உயர் அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். மொத்தத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதங்களில் 1704 அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 80 சதத்திற்கும் அதிகமான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் அரசு இயங்கிக்கொண்டிருக்கிறது, அதேபோல் அந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வர வேண்டும் எனில் அதில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கு இன்றியமையாததாகும். மாவட்ட நிர்வாகத்தின் மூலமே  கடைக்கோடி  மனிதர்க்கும் திட்டங்கள் கொண்டு சேர்க்க முடியும்.

அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை:

மேலும் ஒவ்வொரு திட்டத்திலும் சிறப்பாகவும் விரைவாகவும் செயல்படுத்திட வளர்ச்சித் திட்டங்களில் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அறிந்து கொள்வதற்காகவும், அதுகுறித்த உரையாடுவதற்காகவுமே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் மட்டும் முதலமைச்சர் சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுரைகளும் இந்த மாநாட்டில் வழங்கப்படும்.  மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த விரிவான ஆய்வு முதலமைச்சர் மேற்கொள்வதோடு இன்னும் சிறப்பான பல நடவடிக்கைகளை கொண்டு வருவது தொடர்பாகவும் இந்த மாநாட்டில் ஆய்வுசெய்யப்பட உள்ளது. இந்த மாநாட்டில்மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் என உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

சட்ட ஒழுங்கில் சமரசம் இல்லை: 

இந்ந மாநாட்டிற்கு தலைமை வகித்துள்ள முதலைச்சர் அதில் உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-  தமிழகத்தில் மக்கள் விரும்பிய ஆட்சி நடைபெற்றுவருகிறது,  சட்டம் ஒழுங்கு விஷயத்தில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிவர், போதைப்பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் என பலதரப்பட்ட குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சாதிய மோதல்கள் மற்றும் மத வெறுப்பி பிரச்சாரங்களை ஒருபோதும் இந்த அரசு அனுமதிக்காது,  கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மோசடி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை அவர்களை ஒடுக்க வேண்டும். கூலிப்படை கொலையில் ஈடுபடுவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.  சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக  தமிழ்நாடு இருந்து வருவது எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை தேவை. 

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, மொத்தத்தில் நேர்மையான வெளிப்படையான ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது போதைப்பொருள் குற்றங்களை ஒருபோதும் இந்த அரசு அனுமதிக்காது, மதநல்லிணக்க எதிராக யார் செயல்பட்டாலும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.   மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர் என கூறினார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!