சிக்கலில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.. கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

By vinoth kumarFirst Published Oct 23, 2021, 6:47 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர், வழக்கறிஞர்கள் மாரப்பன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், சட்டவிரோதமாக அதிகாரியைத் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

கரூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சியின் 12 வார்டு உறுப்பினர்களும் வந்திருந்த நிலையில் திடீரென தேர்தலை தள்ளி வைப்பதாக கூறிவிட்டு தேர்தல் அதிகாரி வெளியேறினார். இதனையடுத்து, அவரது வாகனத்தை முற்றுகையிட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கரூரில் காவல் துறையினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், கார் கதவு, கண்ணாடி ஆகியவற்றை தட்டி கார் முன்பு அமர்ந்து மறியல் செய்தனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட 57 பேரை தாந்தோணிமலை போலீசார் நேற்று கைது செய்து இரவு விடுவித்தனர். இதுகுறித்து, தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர், வழக்கறிஞர்கள் மாரப்பன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், சட்டவிரோதமாக அதிகாரியைத் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

click me!