தமிழக அரசை தாறுமாறாக விமர்சித்த சீமான் !! பாய்ந்தது அவதூறு வழக்கு !!

Published : Dec 04, 2019, 11:27 PM IST
தமிழக அரசை தாறுமாறாக விமர்சித்த சீமான் !! பாய்ந்தது அவதூறு வழக்கு !!

சுருக்கம்

தமிழக அரசையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்த  சீமான் மீது  தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அவர் கட்சியின் பொதுக் கூட்டங்களில் தமிழக அரசை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்.

இதே போல் செய்தியாளர்களிடம் பேசும்போதும்  தமிழக அரசை விமர்சித்து வருகிறார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களையும் அவர் விட்டு வைப்பதில்லை.


 
இந்நிலையில் தமிழக அரசை விமர்சித்த சீமான் மீது  தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.  

கடந்த செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதியன்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசையும் முதலமைச்சர்  மற்றும் தமிழக அமைச்சர்களை விமர்சித்துப் பேசியிருந்தார்.


அதற்காக அவர் மீது தற்போது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

PREV
click me!

Recommended Stories

அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..
ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்