செந்தில் பாலாஜிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு - சாமி வரம் கொடுத்தும் பூசாரி சிக்கல் செய்கிறாரே?

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 04:43 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
செந்தில் பாலாஜிக்கு எதிராக  உயர்நீதிமன்றத்தில் வழக்கு -  சாமி வரம் கொடுத்தும் பூசாரி சிக்கல் செய்கிறாரே?

சுருக்கம்

அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்திபாலாஜி போட்டியிட தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனால வாய்ப்பு கிடைத்தும் மீண்டும் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்திபாலாஜி போட்டியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் கரூர் சின்னசாமிக்கு எதிராகவும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கரூர், அய்யம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனுதாக்கல்என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


அவரது மனுவில் கூறி இருப்பதாவது: 
அரவக்குறிச்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, ,திமுக வேட்பாளர் கே.சி. பழனிசாமி ஆகியோர் இந்த தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் , அவர்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்ககூடாது எனவும்  ராஜேந்திரன் மனுவில் கேட்டுகொண்டுள்ளார்.
 மே மாதம் நடைபெற்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா செய்ததால் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது நடைபெற கூடிய இடைதேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் செந்தில் பாலாஜி போட்டியிடுவதாக அறிவிக்கபட்டுள்ளது. 
அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி , திமுக வேட்பாளர் கரூர் சின்னசாமி ஆகியோர் வேட்பாளர்களுக்கு பணம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆகவே அவர்கள்  போட்டியிட அனுமதிக்க கூடாது.  சம்பந்தப்பட்ட  கட்சிகள் சார்பில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்க கூடாது என மனுதாக்கல். இந்த மனு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை  விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!