முதலமைச்சருக்கு எந்த குறையும் இல்லை; பரிபூரண நலமடைந்துள்ளார் - சி.ஆர்.சரஸ்வதி

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 02:55 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
முதலமைச்சருக்கு எந்த குறையும் இல்லை; பரிபூரண நலமடைந்துள்ளார் - சி.ஆர்.சரஸ்வதி

சுருக்கம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எந்த குறையும் இல்லை என்றும், அவர் பரிபூரண நலமடைந்துள்ளார் என்றும அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறினார்.

சி.ஆர். சரஸ்வதி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எந்த குறையும் இல்லை என்று சி.ஆர்.சரஸ்வதி கூறினார். மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் முதல்வர் உள்ளார் என்றும், பரிபூரண நலமடைந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெற்று வருகிறார் என்றும், அதனால் தமிழக மக்களுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கும் என்றும் சி.ஆர். சரஸ்வதி, செய்தியாளர்களிடம் கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எந்தக் குறையும் இல்லை, அவரை மருத்துவர்களும், சிறப்பு மருத்துவர்களும் கண்காணித்து வருவதாகவும் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!