பொது அமைதியை குலைக்க பொய்யான தகவல் பதிவு.. பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் மீது 3 பிரிவுகளில் வழக்கு..!

Published : Jan 28, 2022, 11:34 AM ISTUpdated : Jan 28, 2022, 11:43 AM IST
பொது அமைதியை குலைக்க பொய்யான தகவல் பதிவு.. பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் மீது 3 பிரிவுகளில் வழக்கு..!

சுருக்கம்

சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.  அதில், புகாரில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பொய்யான தகவலை வதந்தியை  மக்களிடையே பரப்பும்  நோக்கில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பு, பகையை உருவாக்கி பொது அமைதியை குலைக்க பொய்யான தகவலை பதிவிட்டதாக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.  அதில், புகாரில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பொய்யான தகவலை வதந்தியை  மக்களிடையே பரப்பும்  நோக்கில் பதிவு ஒன்றை செய்துள்ளதாகவும், இந்த பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே, வெறுப்பையும், பகைமைகளையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையிலும், உள்ளதால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து வினோஜ் பி.செல்வம் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல். உட்பட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளை திரித்தும் சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!