பிறந்து 80 நாளே ஆன குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை.. கலங்கிய பெற்றோர்.. ஓடோடி வந்து உதவிய முதல்வர்.!

By vinoth kumarFirst Published Sep 9, 2021, 10:38 AM IST
Highlights

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்பதுமேல் நகரத்தில் வசிக்கும் வசந்த், அகல்யா தம்பதிக்கு பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை இதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்து 80 நாட்கள் ஆன குழந்தை வருணின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ.2.50 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்பதுமேல் நகரத்தில் வசிக்கும் வசந்த், அகல்யா தம்பதிக்கு பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை இதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த குழந்தையின் சிகிச்சைக்கு நிதி உதவி கோரி பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்பதுமேல் நகரத்தில் வசிக்கும் வசந்த் - அகல்யா தம்பதியினருக்கு பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை வ.வருண் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சேர்த்துள்ள செய்தியை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

இந்தக் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான இரண்டரை லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!