
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், நேற்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். அப்போது, அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். இருவரும் சந்தித்து என்னன்னா பேசினார்கள் என்ற தைகள் அரசால் புரசலாக வெளியாகியிருக்கிறது.
ரஜினியும் கமலும் சினிமாவில் மூத்தவர்கள்; ஆனால், நான் தான் அரசியலில் மூத்தவன் என்று கூறியிருந்தார் விஜயகாந்த். அந்த மூத்தவரைப் பார்த்து, நான் தொடங்கவிருக்கும் பயணத்தில் சென்று வருகிறேன் என்று சொல்வதற்காக இங்கு வந்தேன். இந்த அலுவலகம் கல்யாண மண்டபமாக இருந்தபோது வந்திருக்கிறேன். கட்சி அலுவலகமாக மாறியபிறகு, இப்போது ஒரு அரசியல்வாதியாக இங்கு வந்துள்ளேன். என பேசினார். இதக்கு முன் என்ன நடந்தது? இதோ “கருணாநிதியை பார்த்ததுவிட்டு நேராக அப்படியே கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு விஜயகாந்த்தை சந்திக்க சென்றார்.
கமல் கேப்டனை சந்திக்க வருகிறார் என்ற தகவலை அறிந்த அவரது தொண்டர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் கூடியிருந்தனர். அலுவலகத்தின் வாசலில் நின்றிருந்த விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ்தான் கமலை அழைத்துச் சென்றார். அப்போது, சேரில் உட்கார்ந்திருந்த விஜயகாந்த், உள்ளே நுழைந்த கமலைப் பார்த்ததும் எழுந்து நின்று கைகொடுத்து வரவேற்க... கமல் கைகொடுத்தது, அவரை இறுக அணைத்துக் கொண்டார். பிறகு சேரில் உட்காரச்சொன்னதும் எதிரும் புதிருமாக அமர்ந்தனர். இதனையடுத்து ‘உங்க ஹெல்த் எப்படி இருக்கு கேப்டன்?’ என கமல் கேட்க...’ இப்போ பரவாயில்லை.. எதுவும் பிரச்னை இல்லை. ஆனால், கண்ணுல மட்டும் தண்ணி வந்துட்டு இருக்கு, ரொம்ப நேரம் நிற்க முடியல...’ என சொன்னாராம் விஜயகாந்த்.
அதற்கு கமல் ‘திரும்பவும் டாக்டர பாருங்க.. இதே கண்டிஷன்ல நீங்க போராட்டம் ஆர்பாட்டம்னு போறது நல்லது இல்லை...’ என அட்வைஸ் பண்ணிய அடுத்த நிமிடமே, தான் வந்த விஷயத்தை சொல்லத் தொடங்கினாராம், அப்போது சூடான காபி எடுத்துக் கொண்டு வந்துள்ளனர். இருவரும் காபி அருந்திக் கொண்டே, ‘நான் புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். அதுக்கு உங்க வாழ்த்துக்கள் எனக்கு வேணும். முன்பே உங்களை சந்திக்கணும்னு நினைச்சேன். ஆனால், முடியாமல் போயிடுச்சு...’ என்று சொன்னாராம். அதற்கு விஜயகாந்த், ‘நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
ஆனால், யாரையும் நம்பாதீங்க. உங்களுக்கு எது சரின்னு தோணுதோ, அதை மட்டும் நீங்களே செய்யுங்க. இங்கே கூட இருந்தே குழிப்பறிக்கும் கூட்டம் தமிழக அரசியலில் சுத்திக் கிட்டே இருக்கு அது உங்களையும் குறி வைக்கும் உஷாரா இருங்க’ என தனக்கு ஏற்பட்ட சில மனக்குமுறலை ஆண்டவரிடம் கொட்டியிருக்கிறார் கேப்டன்.
குறிப்பு, கடந்த தேர்தலில் நீங்க தான் வருங்கால தமிழக முதல் அமைச்சர் என ஆசையை தூண்டி ஏமாற்றிய மக்கள் நல தலைவர்களை மைண்டில் வைத்து சொன்னது பச்சப் பிள்ளைக்கும் தெரியும், அந்த கதை ஆண்டவருக்கு தெரியாமல் இருக்குமா?