சூரப்பாவை விசாரிக்க ஆணையம் அமைத்த தமிழக அரசால், அவரை கைது செய்ய முடியாதா..? கொதிக்கும் இந்திய மாணவர் சங்கம்..!

By Ezhilarasan BabuFirst Published Nov 21, 2020, 10:23 AM IST
Highlights

அமைக்கிறார்கள். தமிழக அரசால் விசாரணை ஆணையம் அமைக்க முடியும் என்றால் ஆளுநரிடம் வலியுறுத்தி அவரை கைது செய்யும் நடவடிக்கையும் எடுக்க முடியும். அவரை இடை நீக்கமும் செய்ய முடியம் எனவும் கூறியுள்ளனர்.
 

சூரப்பாவை விசாரிக்க ஆணையம் அமைத்த தமிழக அரசால், ஏன் அவரை இடைநீக்கம் செய்ய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்க முடியவில்லை என இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் மாரியப்பன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பாவை பணி நீக்கம் செய்ய கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 50றக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். 

அப்போது பேசிய அந்த அமைப்பின் மாநில செயலாளர் மாரியப்பன் துணை வேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசால் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் வேலையில் 250 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. தமிழக அரசு தற்போது வரை அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், ஆளுநர் அனுமதி கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என இருக்கிறது. இதனை எங்கள் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது, தமிழக அரசு துணை  வேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் தமிழக தழுவிய போராட்டம் நடத்த நேரிடும்  எனவும் தெரிவித்தார். 

சூரப்பா மீது எந்த குற்றச்சாட்டு இருந்தாலும் இந்த ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என நீதிபதி கலையரசன் கூறி இருக்கிறார். தவறு நடந்துள்ளது என்று தான் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைக்கிறார்கள். தமிழக அரசால் விசாரணை ஆணையம் அமைக்க முடியும் என்றால் ஆளுநரிடம் வலியுறுத்தி அவரை கைது செய்யும் நடவடிக்கையும் எடுக்க முடியும். அவரை இடை நீக்கமும் செய்ய முடியம் எனவும் கூறியுள்ளனர்.
 

click me!