கொரோனாவிலிருந்து காப்பாற்றும் கஞ்சா : அமெரிக்க ஆராய்ச்சியில் செம்ம அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Jan 17, 2022, 4:40 PM IST
Highlights

கஞ்சாவை கொரோனா தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்தலாம், கஞ்சாவில் உள்ள அமிலங்கள் நம் உடலுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கிறது, அதனால் தான் எதிர்காலத்தில் அவை தடுப்பூசிகளை உருவாக்கவும் வைரஸைக் குறிவைக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 

கொரோனா வைரசுக்கான மருந்து ஆராய்ச்சி தீவிரமாக நடந்து வரும் நிலையில், கஞ்சா கொரோனா நோயிலிருந்து காப்பாற்றுகிறது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது உடலில் வைரஸ் நுழைவதை தடுக்கிறது என்றும் ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை 150-க்கும் அதிகமான நாடுகள் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை கோடிக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். முதல் அலை, இரண்டாவது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மூன்றாவது  அலை தீவிரமாகி உள்ளது. இந்நிலையில் தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸில் இருந்து காப்பாற்ற முடியும் என்பதால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு பயன்பட்டில் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து இந்த வைரஸை முழுமையாக குணப் படுத்தும் வகையிலான மருந்து ஆராய்ச்சிகள் பரவலாக நடந்து வருகிறது. இந்நிலையில் கஞ்சா செடியில் இருந்து கொரோனாவுக்கு மருந்து கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா என்ற ஒற்றை வார்த்தையை கேட்டால் உடனே போதை ஆசாமிகள் தான் நினைவுக்கு வருவார்கள்.. இந்நிலையில் கஞ்சா கொரோனா வைரசை ஒழிக்கும் மாமருந்து என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் சர்வ நிவாரணியாக விளங்கும் என ஜர்னல் ஆப் நேச்சுரல் புராடக்ட்ஸ் இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வில் கஞ்சா செடி கொரோனா தொற்றுக்கு எதிராக பயனுள்ளதாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கஞ்சா செடியில் ' கஞ்சா சாடிவா'  எனப்படும் கலவைகள் உள்ளது என்றும் அதன் உதவியுடன் வைரஸ் உடலுக்குள் நுழைவதைத் தடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக லேத்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளும் இந்த தலைப்பை ஆய்வு செய்தனர். அந்த ஆராய்ச்சியில் கஞ்சாவிற்கும் கொரோனாவுக்கும் இடையில் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள முடிந்தது என்று தெரிவித்துள்ளனர், குளோபல் ஹெம்ப் இந்நோவேஷன்ஸ் சென்டர் காலேஜ் ஆப் பார்மசி மற்றும் அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உள்ள லினஸ் பாலிங் நிறுவனம் ஆகியவற்றில் விஞ்ஞானிகள்  இணைந்து ஆராய்ச்சியில்  ஈடுபட்டுள்ளனர்.

அதில் கஞ்சா செடியில் காணப்படும் இரண்டு சேர் மங்கலான கன்னாபி ஜெரோலிக் அமிலம் (CBGA) மற்றும் கன்னாபிடியோலிக்  அமிலம் (CBDA) ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன இந்த கலவைகள் கொரோனா வைரஸின் SARS CoV-2  ஸ்பைக் புரதத்துடன் இணைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் அதாவது இந்தச் ஸ்பைக் புரதங்கள் மனித உடலில் நுழைந்து செல்களை சேதப்படுத்துகிறது  என்பதை அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் ஸ்பைக் புரதத்தை நாம் ஏற்கனவே கஞ்சாவில் உள்ள கலவையுடன் இணைத்தால் அது நம் உடலில் தொற்று நோயை ஏற்படுத்தாது, அதே நேரத்தில் கஞ்சா கலவை என்பது ஒருபோதும் மூளையை பாதிக்காது என்றும், வைரஸை மட்டும் எதிர்த்துப் போராடும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எளிமையாக சொல்ல வேண்டுமெனில் அவற்றை உட்கொள்வதன் மூலம் நாம் போதைக்கு ஆளாகி மனம் கட்டுப்பாட்டை இழக்காது, கஞ்சாவின் இந்த கலவைகள் பிரிட்டனில் காணப்படும் கொரோனாவின் ஆல்பா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் பீட்டா வைரசுக்கு எதிராக சம அளவில் செயல்படுகிறது என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. 

கஞ்சாவை கொரோனா தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்தலாம், கஞ்சாவில் உள்ள அமிலங்கள் நம் உடலுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கிறது, அதனால் தான் எதிர்காலத்தில் அவை தடுப்பூசிகளை உருவாக்கவும் வைரஸைக் குறிவைக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கூடுதலாக கஞ்சாவின் இந்த கலவைகள் வாய்வழியாக எடுக்கப்படலாம், இருப்பினும் அதன் பயன்பாடு இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கஞ்சா செடியில் காணப்படும் கலவைகள் நார்ச்சத்து மற்றும் விலங்குகளின் உணவின் மூலமாகவும் அவை பொதுவாக அழகு சாதனப் பொருட்கள் உடல் லோஷன்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

click me!