மூட்டை மூட்டையாக மதுரைக்குள் நுழைந்த கஞ்சா..!! கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து போலீசார் அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 11, 2020, 11:22 AM IST
Highlights

இவற்றை உசிலம்பட்டி கொண்டு சென்று சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து மதுரை மாநகரில் விற்பனை செய்து தெரியவந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் லாரியிலிருந்து 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
 

மதுரையில் 300 கிலோ கஞ்சாவுடன் கண்டெய்னர்லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகருக்கு கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி மதுரை மாநகர்  சுப்ரமணியபுரம் காவல் நிலையம் எல்லைக்கு அருகே கண்டெய்னர் ஒன்று வந்தபோது தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அதில் கஞ்சா முட்டை முட்டையாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கட்ட தேவன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமு அவருடைய மகன் மலைச்சாமி என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும், இவற்றை உசிலம்பட்டி கொண்டு சென்று சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து மதுரை மாநகரில் விற்பனை செய்து தெரியவந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் லாரியிலிருந்து 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட மதுரை சட்ட ஒழுங்கு துணை ஆணையாளர் சிவ பிரசாத் பின்னர் செய்தியாளர் கூறும்போது: கஞ்சா மூட்டைகளுடன் லாரி ஒன்று மாநகரை சுற்றிவருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து வாகன சோதனை நடத்தியபோது 300கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த மலைச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் இதில் தொடர்புடைய பலரை பிடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். மேலும் 600 கிலோ கஞ்சா வரை ஒரு மாதத்தில் மதுரை மாநகரில் பிடிபட்டதாக காவல்துறை பதிவு செய்துள்ளானர். இவ்வாறு அவர் கூறினார்.

 

click me!