இஸ்லாமியர்- கிறிஸ்தவர்களின் குடியுரிமையை ரத்து செய்து இந்தியாவை இந்துநாடாக அறிவியுங்கள்... மோடிக்கு கெடு..!

Thiraviaraj RM   | Asianet News
Published : Sep 29, 2021, 02:25 PM IST
இஸ்லாமியர்- கிறிஸ்தவர்களின் குடியுரிமையை ரத்து செய்து இந்தியாவை இந்துநாடாக அறிவியுங்கள்... மோடிக்கு கெடு..!

சுருக்கம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்’’எனத் தெரிவித்துள்ளார். 

அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரா’நாடு என்று அறிவிக்க வேண்டும். இல்லையெனில் நான் 'ஜல் சமாதி' அடைவேன் என உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சாமியார் ஆச்சார்ய மகாராஜ் அறிவித்துள்ளார்.

ஆச்சார்யா மகாராஜ் ஏற்கெனவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து  சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தினார். இதன் பிறகு பிரபலமாகத் தொடங்கினார். அடுத்து கடந்த ஆண்டு மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.இதற்காக அவர், அயோத்தியின் ராம் ஜானகி கோவிலின் முன்பாக அமர்ந்து இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக அவர் அதனை நீட்டித்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்து சமாதானப்படுத்தியதை அடுத்து ஆச்சார்ய மஹாராஜ் தனது போராட்டை முடித்துக் கொண்டார்.

 

தற்போது மீண்டும் இந்தியா, இந்து நாடு கோஷத்தை கையிலெடுத்துள்ளார். இதுகுறித்து அவர், ’’வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் நான் சரயு நதியில் ஜல் சமாதி அடைவேன். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்’’எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப்போராட்டம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!