மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து ரத்து.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jun 24, 2020, 5:31 PM IST
Highlights

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருவதால் பொது போக்குவரத்து முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், இந்த மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் மதுரை மாவட்டத்துக்கும் நள்ளிரவு முதல் வருகிற 30-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதேபோல் பிற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்து வருவதால், கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மண்டலத்திற்குள் இதுவரை அனுமதிக்கப்பட்ட போக்குவரத்து நாளை முதல் 30ம் தேதி வரை தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளாகவே இனி போக்குவரத்து அனுமதிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 

click me!