உலகைத் தாலாட்டி தூங்கச் செய்தவர் ஓய்வு தேடலாமா..? மருந்து தேடலாமா.? எஸ்பிபிக்காக இளையராஜா பாடிய பாடல்..!

Published : Sep 12, 2020, 09:15 AM IST
உலகைத் தாலாட்டி தூங்கச் செய்தவர் ஓய்வு தேடலாமா..? மருந்து தேடலாமா.? எஸ்பிபிக்காக இளையராஜா பாடிய பாடல்..!

சுருக்கம்

தமிழ் சினிமா உலகில் இவருக்கு நிகர் இவர்தான் என்கிற அளவிற்கு சிறந்த பாடகராக இருக்கும் எஸ்பி.பாலசுப்பிரமணியம்.

தமிழ் சினிமா உலகில் இவருக்கு நிகர் இவர்தான் என்கிற அளவிற்கு சிறந்த பாடகராக இருக்கும் எஸ்பி.பாலசுப்பிரமணியம். இவரது பாடல் எல்லோரது மனதிற்கும் மருந்து போட்டுக்கொண்டிருக்கிறது.இந்திய அளவில் பல ஆண்டுகளாக சிறந்த பாடகராக திகழ்ந்து வருகின்றார் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்.கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்காக உலகமே பிரார்த்தனை செய்தது. அந்த பிரார்த்தனை இவர் மறுபிறவி எடுக்க காரணமாக அமைந்துள்ளது.

கடந்த ஒரு மாதகாலமாக அவர் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வராம் அவர், தொற்றிலிருந்து மீண்டாலும், அதனால் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கூடுதல் ஆக்ஸிஜன் உதவியுன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார். அவருக்காக சமீபத்தில், உலகளாவிய ஒரு மாஸ் பிரார்த்தனை செய்யப்பட்டது.
அவருடைய மிக நெருங்கிய நண்பரும் இசைஞானியுமான இளையராஜா “பாலு சீக்கிரம் வா..” என்று கூறி ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில் அவர் மிக விரைவாக குணமடைந்து மீண்டுவர வேண்டுமென வேண்டிக்கொள்வதாகக் கூறியிருந்தார்.

இப்போது, இளையராஜா அவர் விரைவில் நல்லபடியாக குணமாகி வீடு திரும்ப ஒரு பிரத்தியேக பாடலை இயற்றி வெளியிட்டுள்ளார்.இந்த பாடலில், “குயிலின் குரலே! இனிய குயிலின் குரலே இந்த ஓய்வு எதற்கு.?
உலகைத் தாலாட்டி தூங்கச் செய்தவர் ஓய்வு தேடலாமா..? மருந்து தேடலாமா.?
இசையின் ஒலிவிருந்து படைத்தவரே ஓய்வு தேடலாமா..? மருந்து தேடலாமா.?
ஏழு ஸ்வரங்களும் ஏங்கி நிற்குதே! உந்தன் வருகைப் பார்த்து ஏங்கி நிற்குதே!!
எங்கள் மனதிற்கு உங்கள் பாட்டு மருந்து, எங்களின் பிரார்த்தனையோ உங்களுக்கு மருந்து..!
இறைவா இறைவா நலம்பெற நீ அருள்வாய்!” என உயிரும் மெய்யும் உருக பாடியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!