பிஎஸ்பிபி பள்ளியை அரசே ஏற்று நடத்த முடியுமா..? முயற்சிக்கும் அந்த முக்கியப்புள்ளி யார்..?

Published : May 28, 2021, 12:18 PM IST
பிஎஸ்பிபி பள்ளியை அரசே ஏற்று நடத்த முடியுமா..? முயற்சிக்கும் அந்த முக்கியப்புள்ளி யார்..?

சுருக்கம்

சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவியரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவியரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில், ஏற்கனவே அவர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேட்டு, பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோரை, அசோக் நகர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, 'இந்த விவகாரம் தொடர்பாக, இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. ராஜகோபாலன் மீது, எங்களுக்கு எந்தப் புகாரும் இல்லாதபோது, நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்' என, பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறியுள்ளனர். 

அந்தப் பள்ளி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அரசே பள்ளியை ஏற்று நடத்த முனைப்பு காட்டி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷும், 'அரசு ஏற்று நடத்த ஆலோசனை நடத்துகிறோம்' என்ற ரீதியில், பேட்டியளித்துள்ளார். இதற்குப் பின்னணியில் தி.மு.க., முக்கிய புள்ளி ஒருவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கான அச்சாரமாகத் தான், பத்ம சேஷாத்ரி பள்ளியை அரசே கையகப்படுத்தி, நிர்வாகம் செய்யவிருக்கிறது என்ற பிரசாரம். அப்படிச் செய்ய முடியுமா? என சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கே.எஸ்.ஜெயகணேஷிடம் கேட்டோம். 

’’பத்ம சேஷாத்ரி பள்ளி, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளி. அது எந்த வகையிலும் அரசின் நிதி உதவியை பெறவில்லை. அதனால், தமிழ்நாடு அரசு இந்த பள்ளியை கையகப்படுத்த முடியாது. அந்தப் பள்ளியின் ஓர் ஆசிரியர் குற்றம் செய்திருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்.

இதேபோல, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன. அப்போதெல்லாம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதை காண முடிகிறது. தனியார் கல்லுாரி மற்றும் பல்கலைகளில், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது, அதைச் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தே தவிர, அந்த நிர்வாகத்தை அரசே எடுத்து நடத்த முயற்சி செய்யவில்லை’’ என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணையப்போகிறேனா..? ஷாக் அப்டேட் கொடுத்த வைத்திலிங்கம்- அதிமுக டாக்டர் சரவணன்..!
ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது..! தம்பிதுரை மீண்டும் திட்டவட்டம்..!