தமிழகத்தில் கட்டாய மதமாற்றமில்லை என முதல்வர் கூற முடியுமா? ஸ்டாலினுக்கு சவால் விடும் குஷ்பு..!

Published : Jan 24, 2022, 05:30 AM IST
தமிழகத்தில் கட்டாய மதமாற்றமில்லை என முதல்வர் கூற முடியுமா? ஸ்டாலினுக்கு சவால் விடும் குஷ்பு..!

சுருக்கம்

 ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தைகளை இழந்தவர்களுக்கு மட்டும்தான் அதன் வலி தெரியும். திமுகவினருக்கு அது தெரியாது. அவர்கள் அரசியல் மட்டும்தான் செய்வர். மாணவி தற்கொலை விவகாரத்தில் முதல்வர் இதுவரை மவுனம் காப்பது ஏன்? 

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று முதல்வர் அறிக்கை வெளியிட முடியுமா? என பாஜக தேசிய குழு உறுப்பினருமான குஷ்பு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகம்பாளையம் கீழத்தெருவைச் சேர்ந்த மாணவி லாவண்யா. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 9ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த 19ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி மாணவி மத மாற்ற முயற்சியினாலேயே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு;- ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தைகளை இழந்தவர்களுக்கு மட்டும்தான் அதன் வலி தெரியும். திமுகவினருக்கு அது தெரியாது. அவர்கள் அரசியல் மட்டும்தான் செய்வர். மாணவி தற்கொலை விவகாரத்தில் முதல்வர் இதுவரை மவுனம் காப்பது ஏன்? தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று முதல்வர் அறிக்கை வெளியிட முடியுமா? எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

சம்பந்தப்பட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும். காவல்துறையிடம் ஆதாரங்கள் இருந்தும், ஏன் இப்படி பயந்துகொண்டு பணியாற்றுகின்றனர் என்பது தெரியவில்லை. இதுபோன்ற விஷயங்களில் பின்வாங்கி காவல்துறையினர் தங்களது நல்ல பெயரை கெடுத்துக் கொள்கின்றனர். எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கும் திருமதவளவன் எங்கே போனால். அவர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை எனவும் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!