இனியும் வேடிக்கை பார்க்க முடியாது... உடனே முடிவு கட்டுங்க... சீறும் பாமக ராமதாஸ்..!

Published : Nov 22, 2019, 12:09 PM IST
இனியும் வேடிக்கை பார்க்க முடியாது... உடனே முடிவு கட்டுங்க... சீறும் பாமக ராமதாஸ்..!

சுருக்கம்

சிங்களப் படையினரின் அத்துமீறலை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தான் இந்தியா வேடிக்கை பார்க்கப் போகிறது? உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கச்சத்தீவு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களப்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. விசைப்படகு சேதம். சிங்களப் படையினரின் அத்துமீறலை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தான் இந்தியா வேடிக்கை பார்க்கப் போகிறது? உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்.

எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக 75 மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் எந்த பகுதியிலும் வளர்ச்சி என்ற பெயரில் மரங்கள் வெட்டப்படக்கூடாது. மரங்களை அகற்றுவது என்பது கடைசி வாய்ப்பாகவே இருக்க வேண்டும்.

கனடாவில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் என்ற பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் ஒன்றுபட்டால் உரிமைகளை மட்டுமல்ல, அதிகாரங்களையும் வென்றெடுக்க முடியும் என்பதற்கு இதுவே உதாரணம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S
அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்வதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது..! எடப்பாடி பழனிசாமி சூளுரை