மேடையில் சீமான் செருப்பை தூக்கி காட்டலாமா.?? வேதனையில் திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published Dec 24, 2021, 1:01 PM IST
Highlights

பொதுவாழ்வில் மாறுபட்ட கருத்து நிலவுவது இயல்புதான் , கட்சி ,  இயக்கத்தை தலைமை தாங்குவோர் கருத்தியல் ரீதியாக அதை எதிர்கொள்ள வேண்டும் . நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் செருப்பை தூக்கி காண்பிப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது ,

பெரியாரின் நினைவு நாளில் விசிக சார்பில் தமிழக முதலமைச்சருக்கு இன்று மாலை "அம்பேத்கர் சுடர்" விருது வழங்கவுள்ளோம் என்றும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் செருப்பை தூக்கி காண்பிப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது , அந்த போக்கு கவலை வேதனை அளிக்கிறது , கண்டனத்திற்குரியது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணாசாலையில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், வாழ்நாள் முழுவதும் சமூகத்தில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிட வேண்டும் என போராடியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் நினைவு நாளில் சமூக நீதியை பாதுகாக்க, ஜனனாயகத்தை பாதுகாப்போம் என உறுதியோற்போம் என பேசினார். பெரியாரின் நினைவு நாளில் விசிக சார்பில் தமிழக முதலமைச்சருக்கு இன்று மாலை "அம்பேத்கர் சுடர்" விருது வழங்கவுள்ளோம்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம், திமுக கூட்டணியில் நகர் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

பொதுவாழ்வில் மாறுபட்ட கருத்து நிலவுவது இயல்புதான் , கட்சி ,  இயக்கத்தை தலைமை தாங்குவோர் கருத்தியல் ரீதியாக அதை எதிர்கொள்ள வேண்டும் . நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் செருப்பை தூக்கி காண்பிப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது , அந்த போக்கு கவலை வேதனை அளிக்கிறது , கண்டனத்திற்குரியது. அரூர் கூட்டத்தில்  மரியாதையக பேச வேண்டும் என கூறுவதற்காகத்தான் மேடையேரினேன் நாம் தமிழர் கட்சியினர் அபாசமாக பேசியதாக மேடையேரிய திமுக தொண்டர் விளக்கமளித்துள்ளார். சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புவதால் சமூக பதற்றம் ஏற்படுகிறது. எனவே அப்படி பட்டவர்கள் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

 

click me!