குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஒரே ஒருநாள் பிரதமராக்க முடியுமா..? திருமாவளவன் சவால்..!

Published : Sep 18, 2021, 02:29 PM IST
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஒரே ஒருநாள் பிரதமராக்க முடியுமா..? திருமாவளவன் சவால்..!

சுருக்கம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஒரே ஒருநாள் பிரதமராக்க முடியுமா? என பிரதமர் மோடிக்கு, வி.சி.க தலைவர் திருமாவளவன் சவால் விடுத்துள்ளார்.   

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஒரே ஒருநாள் பிரதமராக்க முடியுமா? என பிரதமர் மோடிக்கு, வி.சி.க தலைவர் திருமாவளவன் சவால் விடுத்துள்ளார். 

 இதுகுறித்து பேசிய அவர், ‘’ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த அரசியல் பிள்ளை தான் பாரதிய ஜனதா கட்சி. மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற இயலாது. தலைமுறை, தலைமுறையாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்கும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் நியாயமாக கிடைக்கும் நீதியே சமூக நீதி.

ஒடுக்குமுறை என்பது பொது உளவியலாக மாற்றப்பட்டதால் உழைப்பு சுரண்டலும், மூளை சுரண்டலும் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஒரே ஒருநாள் பிரதமராக்க முடியுமா? மீண்டும்  பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. நாடு முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, விசிக என அனைத்தும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக செயல்பட்டால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற முடியும்’’என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!