பாலியலுக்கு மனுஸ்மிருதியை சுட்டிக் காட்டிய நீதிபதி! இதைவிட முட்டாள்தனம் இருக்க முடியுமா? கடுப்பான ராமதாஸ்.!

By vinoth kumar  |  First Published Jun 9, 2023, 6:54 AM IST

 திருமணம் செய்ய அதிகபட்ச வயதே 14-15 வயதுதான். 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்துவிடும். ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடைகிறார்கள். 4-5 மாதங்கள் என்பதெல்லாம் பெரிய வித்தியாசம் இல்லை. மனுஸ்மிருதியில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். 


பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் 7 மாத  கருவை கலைக்க அனுமதி கோரிய வழக்கில் அக்காலத்தில் 17 வயதில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது சாதாரணமாக இருந்தது என்ற குஜராத் உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர், அவருடைய கருவைக் கலைக்க அனுமதிகோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சமீர் தவே, நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது பாட்டியிடம் கேளுங்கள். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மின் கட்டண உயர்வால் சிறு குறு நிறுவனங்கள் மூடியாச்சு..! இப்போ மீண்டும் மின் கட்டண உயர்வா.? அன்புமணி ஆவேசம்

அப்போதெல்லாம் திருமணம் செய்ய அதிகபட்ச வயதே 14-15 வயதுதான். 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்துவிடும். ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடைகிறார்கள். 4-5 மாதங்கள் என்பதெல்லாம் பெரிய வித்தியாசம் இல்லை. மனுஸ்மிருதியில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இதை ஒருமுறை படியுங்கள் எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில், குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து குறித்துக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  வேலூர் ஆவின் பால் பண்ணை பால் திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு? இதன் மதிப்பு இத்தனை கோடியா? ராமதாஸ்..!

இதுதொடர்பாக பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு. பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 17 வயது  பெண்ணின் கருவை கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் முறையிடுகின்றனர். அந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே, ‘‘ அந்தக் காலத்தில் பெண்கள்  14&15 வயதில் திருமணம் செய்து கொள்வதும், 17 வயது ஆவதற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதும் இயல்பானது தான். வேண்டுமானால் மனுஸ்மிர்தி நூலை படித்துப் பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க;- தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு அலட்சியம் காட்டலாமா? கடுப்பாகும் அன்புமணி..!

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கு... 

திருமணம் செய்வதாகக் கூறி தம்முடன் பழகி, ஏமாற்றிய காதலனுடன் திருமணம் செய்து வைக்க ஆணையிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்,‘‘ அந்த பெண்ணுக்கு  'மாங்கல்ய பாக்கியம் இல்லை' என்பதால் அவரை திருமணம் செய்ய முடியாது’’ என்று கூறுகிறார்.

இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா?

குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு.

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணின் கருவை கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் முறையிடுகின்றனர். அந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே, ‘‘ அந்தக் காலத்தில்… pic.twitter.com/uHstt7Yzz9

— Dr S RAMADOSS (@drramadoss)

 

அதைக்கேட்ட நீதிபதி பிரிஜ்ராஜ் சிங், அப்படியா? என்று பதறியதுடன், அவரது ஜாதகத்தை ஆராயந்து அந்தப் பெண்ணுக்கு மாங்கல்யா பாக்கியம் இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி லக்னோ பல்கலைக் கழகத்தின் ஜோதிடத்துறைக்கு ஆணையிட்டுள்ளார். இப்போது சொல்லுங்கள்.... இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? என ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

click me!