இடைத்தேர்தலுக்கு நாங்க ரெடி.. ஓட்டு போட நீங்க ரெடியா..?

By Asianet TamilFirst Published May 17, 2019, 5:20 PM IST
Highlights

நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று 15,939 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று 15,939 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

இதில் மத்திய பாதுகாப்பு படையினர் 1,300 பேரும், தேர்தல் நுண் பார்வையாளர்களாக 1,364 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் உள்ளதால் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

பதற்றமான 656 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதோடு கமல் பேச்சு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையாளர் சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.  நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை சூலூரில் 22 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 15 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 63 பேரும் என மொத்தம் 137 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

click me!