நெருங்கும் ஆபத்து.. மக்களே உஷாரா இருங்க.. யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. முதல்வர் எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Dec 1, 2020, 3:53 PM IST
Highlights

புதிதாக புயல் உருவாவதையொட்டி போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

புதிதாக புயல் உருவாவதையொட்டி போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து  860 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயல் காரணமாக பொதுமக்கள் வெளியில் வராமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

* புதிதாக புயல் உருவாவதையொட்டி போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம்.

* டிசம்பர் 4ம் தேதி வரை பெருமழை, புயல் வீசக்கூடும் என்பதால் தென்மாவட்ட மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க செல்ல வேண்டும்.

* மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்.

* அண்டை மாநில கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அந்தந்த மாநில கரையை அடைய வேண்டும்.

* ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை நீர்படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* மின்கம்பிகள், தெருவிளக்கு கம்பிகள், மின்மாற்றிகள் அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம்.

* கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மருந்து, பசுந்தீவனங்களை போதிய அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

* மீட்பு படையினர் ஜேசிபி வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகளுடன் பாதிப்பு ஏற்படும் இடங்களில் முகாமிட வேண்டும்.

* கூடுதலாக ஆயிரம் மின்வாரிய பணியாளர்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

* கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் தலா 2 வீதம் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார். 

click me!