கிரண் பேடி நடத்தும் வாட்ஸ் அப்புக்கு ஆபாச  படம் அனுப்பிய அதிகாரி - அதிரடி சஸ்பெண்ட் 

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 06:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
கிரண் பேடி நடத்தும் வாட்ஸ் அப்புக்கு ஆபாச  படம் அனுப்பிய அதிகாரி - அதிரடி சஸ்பெண்ட் 

சுருக்கம்

பாண்டிச்சேரி லெப்டினெண்ட் கவர்னர் கிரன்பேடி நடத்தி வந்த வாட்ஸ் அப்பில் இடம்பெற்றிருந்த உயர் அதிகாரி ஆபாச படத்தை அனுப்பினார். இதையடுத்து அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது நடவடிக்கையை எதிர்நோக்கி உள்ளார்.

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளுக்கு உத்தரவு மற்றும் நடவடிக்கை எடுக்க வாட்ஸ் அப் குழுவை நிர்வகித்து வந்தார். இந்த குழுவில் புதுச்சேரியில் உள்ள ஆண் பெண் ஐஏஎஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். 

இந்த குழுவில் உறுப்பினராக உள்ள கூட்டுறவு சங்கங்களின்  பதிவாளர் ஏ.எஸ்.சிவக்குமார்  என்பவர் தனது தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை கிரண்பேடியின் வாட்ஸ் அப் குழுவுக்கு அனுப்பியுள்ளார். 

இதை பார்த்து அந்த வாட்ஸ் அப் குழ்வின் அட்மினாக இருக்கும் ஐஏஎஸ் பெண் அதிகாரி அம்ரிதா பேல் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக இது பற்றி கிரண்பேடிக்கு தகவல் கொடுத்தார். 

உடனடியாக வாட்ஸ் அப்பை பார்த்த கிரண் பேடி கடும் ஆத்திரம் அடைந்தார். உடனடியாக அம்ரிதா பேலை புகார் அளிக்க சொன்னார். இதையடுத்து டிஜிபி எஸ்.கே கவுதமிடம்  வாட்ஸ் அட்மின் அம்ரிதா பேல் புகார் அளிக்க சிவகுமாரை போலீசார் உடனடியாக அள்ளி தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். 

ஆபாச படம் அனுப்பிய அதிகாரி சிவகுமாரை  கிரண்பேடி அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார். 
 உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த பிரச்சனை தற்போது பாண்டிச்சேரி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

முதல்வரை கலந்து  ஆலோசிக்காமல் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Rahul Gandhi and Vijay: தமிழகத்தின் 'GOAT' கூட்டணி: ராகுல் - விஜய் கைகோர்ப்பில் உருவான அரசியல் அதிரடி!
பதவியேற்ற முதல் நாளே ராஜினாமா செய்த விஜய்..! திருச்சி கிழக்கில் மீண்டும் இடைத் தேர்தல்..