ஸ்டெர்லைட் வன்முறைக்கு எதிர்ப்பு …. தொடங்கியது முழு அடைப்புப் போராட்டம்….

Asianet News Tamil  
Published : May 25, 2018, 06:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
ஸ்டெர்லைட் வன்முறைக்கு எதிர்ப்பு …. தொடங்கியது முழு அடைப்புப் போராட்டம்….

சுருக்கம்

bundh in tamilnadu...shops closed DMK and opp parties

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும்  தமிழகத்தில் இன்று தி.மு.க. கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதே நேரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ், ரெயில்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போ் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறுக்கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எதிர்கட்சிகள் சார்பில்  இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 



தி.மு.க. செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன. மேலும் முழு அடைப்பைத் தொடா்ந்து மாவட்டங்களின் தலை நகரங்களில் சாலை மறியல் போராட்டமும் நடைபெறவுள்ளது.

சென்னையில் இன்று நடைபெறவுள்ள போராட்டங்களில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசா், வைகோ, கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பங்கேற்கின்றனர்.

முழு அடைப்பு போராட்டத்தைத் தொடா்ந்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ஆட்டோக்கள், டாக்சிகள்  இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆட்டோகளின் சேவை பாதிக்கப்படும்  என தெரிகிறது. 

அதே நேரத்தில் முழு அடைப்பு போராட்டத்தால், பேருந்து, ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. . மேலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!