பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவாங்க.. அரசு ஊழியர்களுக்காக ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சி

Published : Mar 11, 2022, 06:08 AM IST
பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவாங்க.. அரசு ஊழியர்களுக்காக ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சி

சுருக்கம்

அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அல்லலுக்காளாக்கிய அதிமுக ஆட்சிக் காலத்தில், 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் ஆறு லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர்.

தமிழக முதலமைச்சர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்த ஜீவாதாரக் கோரிக்கையைப் பரிவோடு பரிசீலித்து, உடனடியாகப் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட ஆவன செய்து உதவிடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார். 

19 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம்

இது குறித்து எம்எல்ஏவும்  மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அல்லலுக்காளாக்கிய அதிமுக ஆட்சிக் காலத்தில், 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் ஆறு லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர். பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 19 ஆண்டுகளாக நீண்டு வருகிறது.

இதையும் படிங்க;- Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. முதல்வர் அறிவிப்பு..!

பழைய ஓய்வூதிய திட்டம்

ஊழியர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்து, சூதாட்டத் தன்மைகள் கொண்ட பங்குச்சந்தையில் முதலீடு செய்து, பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் பயன்களுக்குப் பங்கம் விளைவிப்பதாகவே (CPS Contributory Pension Scheme) அமைந்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு முதலிய எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது என்பதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி போராடி வருகின்றனர்.

மேற்குவங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துள்ளன. கேரள, டெல்லி, ஆந்திர மாநிலங்களின் அரசுகள், வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

இதையும் படிங்க;- Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டமா? பள்ளிக்கல்வித்துறை கூறுவது என்ன?

ஜவாஹிருல்லா கோரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இலட்சக்கணக்கான கையெழுத்துகளைத் திரட்டியுள்ளனர். அதை 25.03.2022 அன்று தமிழக முதலமைச்சரிடம் வழங்க உள்ளதாகத் தெரிகிறது. தமிழக முதலமைச்சர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்த ஜீவாதாரக் கோரிக்கையைப் பரிவோடு பரிசீலித்து, உடனடியாகப் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட ஆவன செய்து உதவிடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பங்கம் விளைவிக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!