பவுன்சர்கள் பாதுகாப்பில் ஓபிஎஸ் வீடு - முக்கிய பிரமுகர்கள் வருகை???

 
Published : Feb 10, 2017, 11:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
பவுன்சர்கள் பாதுகாப்பில் ஓபிஎஸ் வீடு - முக்கிய பிரமுகர்கள் வருகை???

சுருக்கம்

ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஓபிஎஸ்ம்  சசிகலாவும் தொடர்ந்து மோதி வருகின்றனர். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் ஓபிஎஸ் க்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது, சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டுக்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.

இதையடுத்து ஓபிஎஸ் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறை உயரதிகாரிகள் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று எப்படி பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பைத் தொடர்ந்து கூடுதலாகவும் போலீசாசை நிறுத்த காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ் ஐ பார்ப்பதற்காக மேலும் பல விஐபி க்கள் வரக்கூடும் என்பதால் போலீசாருடன் பவுண்ச்சர்ஸ்களையும் பாதுகாப்புப்பாக நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஓபிஎஸ் வீட்டுக்கு 9 பவுண்ச்சர்ஸ் வந்துள்ளனர். அவர்கள் ஓபிஎஸ் சின் வீட்டுக்குள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். விரையில் பல முக்கிய பிரமுகர்கள் முதலமைச்சரின் வீட்டுக்கு வர உள்ளதை இது காட்டுகிறது… யார்,,யார் வரப்போகிறார்களோ?

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு