புத்தக கண்காட்சிக்கு அள்ளி வழங்கிய எடப்பாடி !! ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவு !!

By Selvanayagam PFirst Published Jan 9, 2020, 10:42 PM IST
Highlights

புத்தக கண்காட்சிக்கு அடுத்த ஆண்டு முதல் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் 43-வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இன்று முதல் ஜனவரி 21-ந்தேதி வரை சென்னையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. 

இந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன் , ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், கேபி அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து புத்தக கண்காட்சி திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியபோது அடுத்த ஆண்டு முதல் புத்தக கண்காட்சிக்கு  ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

புத்தகக் காட்சிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு இலவச அனுமதி சீட்டுகள் அனுப்பப்பட்டுள்ளது.

வேலைநாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 

புத்தக கண்காட்சியில் கீழடி கண்காட்சி சிறப்பு அம்சமாக இடம் பெற்றுள்ளது. புத்தக கண்காட்சியில் சென்னை புத்தக கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் ரூ. 10 ஆகும், பள்ளி மாணவர்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது என்று தெரிவித்தார்.

click me!