தீபாவிற்கு படகு சின்னம் ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

First Published Mar 27, 2017, 5:10 PM IST
Highlights
boat dymbol for deepa in rk nagar


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை வேட்பாளர் தீபாவிற்கு படகு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 16 ஆம் தேதி முதல்23 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும், சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும், திமுக சார்பில் மருதுகணேஷும், தேமுதிக சார்பில் மதிவாணனும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தீபாவும் என சுயேட்சைகள் உள்பட 127பேர் மனுதாக்கல் செய்தனர்.

இதன் மனு பரிசீலனை கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது தீபாவின் மனுவில் கணவர் பெயருக்காண கட்டத்தில் பெயர் குறிப்பிடவில்லை.

எனவே தீபாவின் மனுவை சிறிது நேர தாமதத்திற்கு பிறகு ஏற்பதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் அறிவித்தார்.

இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியதால் சசிகலா தரப்பிற்கு தொப்பி சின்னமும், ஒ.பி.எஸ் தரப்புக்கு இரட்டை மின்விளக்கு சின்னமும் வழங்கப்பட்டது.

அதைதொடர்ந்து தற்போது, தீபாவிற்கு படகு சின்னம் ஒதுக்கீடு  செய்யபடுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். 

click me!