பேராசிரியர் துப்பட்டாவை அகற்றியது காவல்துறை - ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடைக்குத் தடை

Asianet News Tamil  
Published : May 05, 2018, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
பேராசிரியர் துப்பட்டாவை அகற்றியது காவல்துறை - ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடைக்குத் தடை

சுருக்கம்

Block dress not allowed in college

இரண்டுநாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இரண்டாவது நாள் சென்னை பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் ஜனாதிபதி. 

இந்நிகழ்வில் கறுப்பு ஆடைக்கு தடை விதித்துள்ளது காவல்துறை. முன்னறிவுப்பு ஏதுமின்றி இந்த உத்தரவினால் யதேச்சையாக பேராசிரியர் ஒருவர் கறுப்பு துப்பட்டாவை அணிந்து வந்துள்ளார். இந்நிலையில் காவல் துறை அவரது கறுப்பு துப்பட்டாவை அணியக்கூடாது எனக் கட்டாயப்படுத்தி அதை அகற்றியது.

காவிரி மேலாண்மை விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டியதை ஒட்டி ஜனாதிபதிக்கும் அவ்வாறு நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது காவல்துறை, இதற்காக காவல்துறையின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.

 

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!