
நாட்டில் புழங்கும் கருப்புபணத்தை தடுத்து, ஊழலுக்கு எதிராக போராடுவதில்டிஜிட்டல் பரிமாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. இளைஞர்கள் டிஜிட்டல்பரிமாற்றத்தை செயல்படுத்தி, ஊழலை ஒழிக்க வேண்டும் என்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
மான் கி பாத்
பிரதமர் மோடி தான் பதவி ஏற்றதில் இருந்து மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமையும் வானொலி மூலம் மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’(மான் கி பாத்) என்ற தலைப்பில் அவர் ஒவ்வொரு மாதமும் உரையாற்றி வருகிறார்.
29வது மாதம்
அதன்படி, 29-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் மோடி மக்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது-
இளைஞர்கள்
மத்திய அரசு அறிமுகப்படுத்திய டிஜிட்டல் பேமெண்ட் திட்டங்கள் அனைத்துக்கும் இளைஞர்கள் தான் தூதுவர்களாக வர வேண்டும். இந்த ஒரு இயக்கமாக இளைஞர்கள் எடுத்துச் சென்று, ஊழலுக்கும், கருப்புபணத்துக்கும் எதிராக போராட வேண்டும்.
வீரர்கள்
என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு தனிநபரும் இந்த இயக்கத்தில் இணைந்து, ஊழலுக்கு எதிராக புதிய படையை உருவாக்க வேண்டும். நாட்டில் ஊழல் இல்லாத நிலையையும், சுத்தமான சூழலையும் உண்டாக்க இளைஞர்கள் தான் வீரர்களாக களம் இறங்க வேண்டும்.
மாறிவருகிறார்கள்
மக்கள் படிப்படியாக ரொக்கப் பணப் பரிமாற்றத்தை கைவிட்டு, டிஜிட்டல்பரிமாற்றத்துக்கு மாறி வருகிறார்கள். இளைஞர்கள் தங்கள் மொபைல் போன் மூலம் தங்கள் பரிமாற்றத்தை நடத்துகிறார்கள்.
ரூ.150 கோடி பரிசு
கடந்த 2 மாதங்களில் டிஜிட்டல் பரிமாற்றத்தை மேற்கொண்ட 10 லட்சம் பேருக்கும் 50 ஆயிரம் வர்த்தகர்களுக்கும் அரசு ரூ.150 கோடி மதிப்பிலான பரிசுகளை வழங்கியுள்ளது.
டிஜிட்டல் பேமெண்ட் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு டாக்டர் அம்பேத்கரின் 126-வது பிறந்த நாள் அன்று, அதாவது ஏப்ரல் 14-ந் தேதியோடு 100 நாட்கள் முடிகிறது.டிஜிட்டல் பரிமாற்றம் மேற்கொள்ள மக்கள் குறைந்தபட்சம் 125 பேருக்கு ‘பிம்’ செயலியை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய உதவி செய்ய வேண்டும்.
டுவின்பிட் கழிப்பறை
நாம் பயன்படுத்தும் கழிப்பறையை சுத்தம் செய்வதில் எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது. ‘டுவின் பிட்’ கழிப்பறைகளை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்து அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த புதிய வகை கழிப்பறைகள் மிகவும் வசதியானது, எந்தவிதமான அசவுகரியகுறைகள் இருக்காது, இதை சுத்தம் செய்வதில் எந்த தயக்கமும் காட்டக்கூடாது, அதற்கான உடல்ரீதியான தடைகளும் இருக்கக்கூடாது.
பாராட்டு
சமீபத்தில் மாற்றித்திறனாளிகள்(கண்பார்வையற்றவர்கள்) டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமாக செயல்பட்டுள்ளனர்.
இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றனர் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். பெண்களைப் பொருத்தவரை விண்வெளி அறிவியல், அல்லது விளையாட்டு என எந்த துறையிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
பெண் குழந்தைகள்
பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டம் நீண்ட காலத்துக்கு அரசின் திட்டமாக இருக்காது, அது சமூகத்தின் கருணையையும், மக்களுக்கு விழிப்புணர்வையும் உண்டாக்கும்
இவ்வாறு அவர் பேசினார்.