திமுக ஆட்சிக்கு வர பாஜக ஒருபோதும் அனுமதிக்காது... ஃபுல் ஃபார்மில் தமிழக பாஜக..!

By Asianet TamilFirst Published Dec 20, 2020, 9:01 PM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வர பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. திமுகவின் உண்மை முகத்தை பாஜக மக்களிடம் கொண்டு சேர்க்கும் தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் தெரிவித்துள்ளார்.
 

தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜகவுக்கென ஒரு சிஸ்டம் உள்ளது. அதன்படிதான் எந்த முடிவையும் எங்கள் தலைமை அறிவிக்கும். அதைத்தான் மாநில  தலைவர் முருகன் சொல்லியுள்ளார். அதிமுகவோடு கூட்டணி தொடரும் என்று சொல்லும் உரிமை உள்ளவர்தான் இதையும் (முதல்வர் வேட்பாளர்) சொன்னார். எந்த முடிவையும் பாஜக  தலைமை அறிவிக்கும் என்பதால்தான் தமிழகத்திற்கு வந்தபோது மத்திய அமைச்சர் அமித்ஷா எதையும் சொல்லவில்லை. பாஜகவின்  கட்டமைப்பு அப்படித்தான். சின்ன முடிவைகூட பாஜக தலைமைதான் அறிவிக்கும்.
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை. அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது என்று தலைவர் முருகனே தெரிவித்துவிட்டார்.  கூட்டணி என்பது எல்லோரும் சேர்ந்ததுதான். எல்லோருமே கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.  திமுக தமிழின விரோத கட்சி. தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி. அதை விவசாயிகள் விஷயத்திலும் சொல்லலாம். 2016-ல் திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் இடைத்தரகர்கள் நீக்கப்படுவார்கள் என்று சொன்னார்கள். அதையே காங்கிரஸ் கட்சியும் சொன்னது. இந்த சட்டங்களை விவசாயிகளுக்காக பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். அதனால்தான் அவர்களால் இச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொங்கல் பரிசாக தமிழக அரசு 2,500 ரூபாய் வழங்கும் என அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் மக்களுக்கு எதுவும் கிடைக்க கூடாது என திமுக அதை விமர்சிக்கிறது. மக்களுக்கு நல்லது செய்வதை எதிர்க்கட்சிகள் தடுக்க முயற்சிக்கிறார்கள். இப்படி மக்களுக்கு எதுவும் செய்யாத கட்சியை மக்கள் ஆதரிக்கமாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வர பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. திமுகவின் உண்மை முகத்தை பாஜக மக்களிடம் கொண்டு சேர்க்கும்” என கே.டி. ராகவன் தெரிவித்தார்.
 

click me!