நாட்டின் நலன் கருதி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கணும்... பாஜக துணை தலைவர் அண்ணாமலை அதிரடி..!

By Asianet TamilFirst Published Apr 24, 2021, 8:44 PM IST
Highlights

தற்போது நாட்டின் அவசரம் கருதி ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்பதே என்னுடைய கருத்து என்று தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

அண்ணாமலை பழநியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நான் தற்போது குணமாகிவிட்டேன். மீண்டும் மக்கள் பணியில் ஈடுபடும் முன்பு முருகனைத் தரிசிக்க பழநி வந்தேன். நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வசதிகள் இருந்தும்கூட‌ அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆக்சிஜன் பெற இந்திய தூதரக அதிகாரிகள் பேசி வருகிறார்கள். இதற்கு எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் செயலே காரணம்.
ஸ்டெர்லைட் ஆலையில் இயல்பாகவே ஆக்சிஜன் தயாரிக்கும் வசதி உள்ளது. என்றாலும் உற்பத்தி செய்யவிடாமல் அரசியல் செய்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மிகப் பிற்போக்காக நடந்கின்றன. தற்போது நாட்டின் அவசரம் கருதி ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்பதே என்னுடைய கருத்து. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்கூட தவறான கருத்தைப் பரப்பி, பொதுமக்களை தேவையில்லாமல் பீதிக்கு உள்ளாக்கி, தடுப்பூசி வீணாகவும் காரணமாக இருக்கிறார்கள்.
சட்டம்- ஒழுங்கைக் காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அதிமுக அரசு எதிர்ப்பது தவறு. எதிர்க்கட்சிகள் தங்களுடைய தோல்வியை மறைக்கவே வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதாகக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதில் முறைகேடுகள் என்றால், அதை நிரூபிக்க தேர்தல் ஆணையம் பல முறை சவால்விட்டுள்ளது. ஆனால், அப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் ஒதுங்கிக்கொள்கின்றன. தற்போது மீண்டும் குற்றம் சாட்டுவது என்பது மலிவான அரசியல். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
 

click me!