சின்னாபின்னமாகிப்போன அதிமுகவுக்கு எப்படி இரட்டை இலை சின்னம் கிடைக்கும்….அதிரடி தமிழிசை…

Asianet News Tamil  
Published : Mar 21, 2017, 06:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
சின்னாபின்னமாகிப்போன அதிமுகவுக்கு எப்படி இரட்டை இலை சின்னம் கிடைக்கும்….அதிரடி தமிழிசை…

சுருக்கம்

BJP TN president

சின்னாபின்னமாகிப்போன அதிமுகவுக்கு எப்படி இரட்டை இலை சின்னம் கிடைக்கும்….அதிரடி தமிழிசை…

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி என பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஆர்,கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் தங்களுத்தான என்று சசிகலா தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளன. இது தொடர்பாக நாளை இரு அணியினரிடமும் நாளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

இதனிடையே இரட்டை இலை சின்னத்தை முடக்க பாஜக சதி செய்வதாக சசிகலா தரப்பு அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்,

இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை,இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது பாஜக கைகளில் இல்லை என்றும், அது அதிமுகவின் கைகளில் தான் உள்ளது என்று தெரிவித்தார்.

தற்போது அதிமுக சின்னா பின்னமாகிக் கிடக்கிறது என்றும், இப்படி பிரிந்து கிடக்கும் அவர்களுக்கு எப்படி இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

இப்பிரச்சனையில் தேர்தல் ஆணையம் சட்டப்படிதான் முடிவு எடுக்கும் என்றும்,இதில் யாரும் தலையிட முடியாது என்றும் தமிழிசை திட்டவட்டமாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

திடீர் ட்விஸ்ட்..! தவெகவில் இணையும் பாஜக Ex மத்திய அமைச்சர்..! தட்டித் தூக்கும் விஜய்..!
தமிழகத்தில் எங்கேயுமே கஞ்சா இல்லையா? கொஞ்சம் கூட கூச்சமே கிடையாதா? அமைச்சரை வறுத்தெடுத்த அண்ணாமலை!