ஒத்துவராத நமச்சிவாயம்... சொதப்பிய 100 கோடி பிளான்... க்ளைமேக்சில் ரெய்டு, சிபிஐ கேஸ் வெறித்தனமான மிரட்டலுக்கு ரெடி!

By sathish kFirst Published Sep 17, 2019, 11:20 AM IST
Highlights

புதுச்சேரி காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க 100 கோடி பிளானும் சொதப்பியதால், க்ளைமேக்சில் காங்கிரஸ் பிரமுகர்கள் மீது ரெய்டு, சிபிஐ கேஸ் வெறித்தனமான மிரட்டலுக்கு ரெடியாகியுள்ளதாம்.

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு முதல் மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில் அமைச்சர் பதவி இல்லாத அதிருப்தி அடைந்த 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் கடும் இழுபறிக்கு பிறகு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 99 வாக்குகள் மட்டுமே ஆளும் கட்சிக்கு ஆதரவாக கிடைத்ததால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.  குமாரசாமிக்கு ஆதரவளித்து வந்த இரு சுயேச்சைகள் உள்பட 18 எம்எல்ஏக்கள் பாஜக முகாமுக்கு சென்றுவிட்ட  நிலையில் பிஜேபி தனது மெஜாரிட்டியை நிரூபித்துள்ளதால் எடியூரப்பா மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தென் இந்தியாவில் கால்பதிக்க பிஜேபியின் இந்த அதிரடியான மூவ், அவர்கள் நடத்திய குதிரை பேரம் என விமர்சிக்கப்பட்டது.

அடுத்ததாக, பிஜேபியின் நெக்ஸ்ட் டார்கெட் காங்கிரஸ் ஆளும் குட்டி மாநிலமான புதுவையை குறிவைத்துள்ளதாக தெரிகிறது.பிஜேபி, காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்கிறது என்ற தகவல்கள் டெல்லி காங்கிரஸ் தலைமைக்குத் தெரிந்தும், உடனே விரைந்து வந்த மேலிடப் பார்வையாளர்களைப் புதுச்சேரியில் தங்கி கண்காணித்து தகவல் சொல்லச் சொன்னார்கள். வந்தவர்களும் விசாரித்ததில் பிஜேபி நமச்சிவாயத்திற்கு வலை விரித்தது தெரிகிறது. 

காங்கிரஸ் கட்சித் தலைவரும், மூத்த அமைச்சருமான நமச்சிவாயத்தைக் குறிவைத்து பிஜேபியின் முக்கியமான தலைவர்கள் 2 பேர் “உங்களை முதல்வராக்குகிறோம், நீங்கள் பாஜகவில் சேருங்கள் என்று பேசியுள்ளார். பதற்ற்றமடையாமல் பேசிய நமச்சிவாயம், ‘ ராகுல், சோனியா மேடமும் என்னை நம்பி இந்த தலைமைப் பொறுப்பையும், அமைச்சர் பதவியும் கொடுத்டுருக்காங்க. அப்படிப்பட்ட கட்சிக்கும் தலைவர்களுக்கும் எப்போதும் துரோகம் செய்யமாட்டேன் என்று பிஜேபியின் பேரத்துக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம், இந்த விஷயம் தெரிந்த டெல்லி விஐபி, பாஜகவால் நம்ம நமச்சிவாயத்தை அசைக்கமுடியாது என்று மெஸேஜ் அனுப்பியிருக்கிறார்.

அடுத்ததாக தான், மூன்றாவது முயற்சியாகத்தான் என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி,யாகவிருந்த ராதாகிருஷ்ணனை முதல்வராக்க, எம்.எல்.ஏ,வுக்கு பத்துக்கோடி வீதம் நூறு கோடி ரூபாய் அளிக்க திட்டம் போட்டுள்ளது பிஜேபி தலைமை, பிஜேபி லீடர் அமித்ஷா மகனும் ராதாகிருஷ்ணனும் தொடர்ந்து சந்தித்துப் பேசிவருவதாகவும் சொல்கிறார்கள் நெருங்கிய புள்ளிகள்.

ஆனால், பாருங்க இன்னமும் பிஜேபியின் பண வலையில் எந்த எம்.எல்.ஏவும் சிக்கலையாம்,  என்ன காரணம் என்று விசாரித்தால். சிறுபான்மையினர் வாக்குகள் புதுச்சேரியில் அதிகமாக இருக்கிறது. புதுச்சேரியில் பிஜேபியை மக்கள் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவில்லை.  பிஜேபிவை மக்கள் வெறுக்கும் நேரத்தில் பிஜேபிக்கு எம்.எல்.ஏக்கள் தாவினால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது அத்தனை எம்.எள்.ஏகளுக்கும் நல்லாவே தெரியும், அதுமட்டுமல்ல அடுத்த தேர்தலில் போட்டியிட்டால் காலி என்ற பயம்தான்’ என்கிறார்கள் புதுச்சேரி காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க 100 கோடி பிளானும் சொதப்பியதால், க்ளைமேக்சில் காங்கிரஸ் பிரமுகர்கள் மீது ரெய்டு, சிபிஐ கேஸ் வெறித்தனமான மிரட்டலுக்கு ரெடியாகியுள்ளதாம்.

click me!