திமுகவில் ஏராளமானோர் அதிருப்தி.. எம்எல்ஏக்களும் அதிருப்தி..ஸ்டாலினுக்கு எதிராக கம்பு சுற்றும் வி.பி.துரைசாமி!

By Asianet TamilFirst Published Aug 6, 2020, 8:44 PM IST
Highlights

திமுகவில் ஏராளமானோர் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவரும் பாஜக துணைத் தலைவருமான வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி,  மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கவில்லை என்பதால், பாஜகவுக்கு தாவினார். தற்போது அவர் தமிழக பாஜக துணைத் தலைவராக உள்ளார். தற்போது சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்பதால், ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பாஜக பக்கம் சாயத் தொடங்கியிருக்கிறார். அடுத்தடுத்து திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளோர் பாஜக பக்கம் சாய்ந்ததால், திமுக அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் திமுகவில் ஏராளமானோர் அதிருப்தியில் இருப்பதாக வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வி.பி.துரைசாமி இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “திமுகவில் உள்ளோர் எல்லா மாவட்டங்களிலும் ஏராளமானோர் அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுக எம்.எல்.ஏக்களிலும் பலர் அதிருப்தியில் உள்ளனர். அதற்கு முக்கிய காரணம், திமுகவின் குடும்ப அரசியல்தான். எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகள் எதுவும் ஏற்புடையதாக இல்லை. 
கந்த சஷ்டி விவகாரத்தில் முதன்முதலில் ஸ்டாலின்தான் குரல் கொடுத்திருக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை அனுசரித்துச் செல்லக்கூடிய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும்.” என்று வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். 

click me!