ஜே.பி நட்டா தலைமையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம்.. வேட்பாளர்களை அடையாளம் காண்பது குறித்து அலோசனை.?

By Ezhilarasan BabuFirst Published Jan 30, 2021, 12:53 PM IST
Highlights

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணி, கூட்டணியில் கேட்டுப் பெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை, வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள், வேட்பாளர்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

ஜே.பி.நட்டா தலைமையில் மதுரையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையில் தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்கியுள்ள பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மதுரை வேலம்மாள் மருத்துவமனை விடுதியில் பாஜக மாநில உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆலோசனைக்கூட்டத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத்தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், ஜி.கே செல்வகுமார், கே.டி.ராகவன், நைனார் நாகேந்திரன், கரு நாகராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தேசிய மற்றும் மாநில பொதுச்செயலாளர்களும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணி, கூட்டணியில் கேட்டுப் பெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை, வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள், வேட்பாளர்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக  கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து மதிய உணவு முடிந்ததும் மாலை 4 மணிக்கு அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து உரையாடுகிறார். 

மாலை 5:30 மணி அளவில் மதுரை ரிங்ரோடு  மஸ்தான் பெட்டி பகுதியில் உள்ள திரு.வாஜ்பாய் திடலில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் துவங்குகிறது. இதில் பாஜக தேசிய தலைவர் திரு ஜேபி நட்ட அவர்கள் பாஜக தமிழக தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள். மேலும் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். இக்கூட்டத்தில் 6:15 மணியளவில் ஜேபி நட்டா அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். 

இரவு 8 மணி அளவில் வேலம்மாள் கல்லூரி வளாகத்தில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் திரு ஜேபி நட்டா அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
 

click me!