தஞ்சாவூர் SPயை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.. கொந்தளித்த எச்.ராஜா !!

Published : Jan 22, 2022, 08:27 AM IST
தஞ்சாவூர் SPயை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.. கொந்தளித்த எச்.ராஜா !!

சுருக்கம்

தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு ஆதரவாக போராட்டம் செய்பவர்களை, மிரட்டும் தொனியில் பேசும் தஞ்சை எஸ்.பி ரவளிபிரியாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி, 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விடுதி வார்டன் சகாயமேரி, மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம்செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த லாவண்யா தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 பா.ஜ.க-வினர் மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் கட்டாய மதமாற்ற முயற்சிதான் காரணம் எனவும், உடனே நிர்வாகிகளைக் கைதுசெய்து பள்ளி மற்றும் விடுதியை இழுத்துமூடவேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ’இரு தினங்களுக்கு முன்பு கட்டாய மதமாற்றம் ஏற்காததால், துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு ஆதரவாக போராட்டம் செய்பவர்களை, மிரட்டும் தொனியில் பேசும் தஞ்சை எஸ்.பி ரவளிபிரியாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எச்.ராஜா, ‘தஞ்சை,திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள மைக்கேல்பட்டியிலுள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி லாவண்யாவை மதமாற்ற நிர்பந்தித்து அதற்கு மறுத்ததால் கழிவறையை கழுவ நிர்பந்தித்த காரணத்தால் விஷமருந்தி மரணித்துள்ளார். இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு பள்ளி மூடப்பட வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தது இருக்கிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!