மணிப்பூரில் திருப்பம்..பாஜக ஆட்சிக்கு சிக்கல் போயிந்தே.. அமித்ஷா சந்திப்புக்கு பிறகு கூட்டணி கட்சி கப்சிப்!

By Asianet TamilFirst Published Jun 26, 2020, 9:41 PM IST
Highlights

பேச்சுவார்த்தைகளின்போது தேசிய மக்கள் கட்சி எழுப்பிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து பாஜக ஆட்சிக்கு எதிராக ஆதரவை வாபஸ் பெற்ற முடிவை கைவிடுவதாக தேசிய மக்கள் கட்சி அறிவித்தது. தலைநகர் இம்பாலில் ஆளுநர் நஜ்மாவைச் சந்தித்து பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு அளிப்பதாக 4 எம்.எல்.ஏ.க்களும் தெரிவித்தனர். இதனால், மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு எதிராக எழுந்த அரசியல் சிக்கல் தீர்ந்தது.

மணிப்பூரில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகப் பல்டி அடித்தனர்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2017ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனாலும் தேசிய மக்கள் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் பாஜக ஆட்சி அமைத்தது. முதல்வராக  பிரேன் சிங் பதவியேற்றார். இந்நிலையில் கடந்த வாரம் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி வாபஸ் பெறுவதாக அறிவித்தது. அக்கட்சியின் தலைவர் கன்ராட் சங்மா இதை அறிவித்தார். மேலும் பாஜகவைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.


இதனால், ஆளும் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி தங்களை ஆட்சி அமைக்க ஆளு நர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் உரிமை கோரியது. இதனால் பாஜக ஆட்சி கவிழ்ந்து அரசியம் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கன்ராட் சங்மா டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களைச் சந்தித்து பேசினார்.


இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது தேசிய மக்கள் கட்சி எழுப்பிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து பாஜக ஆட்சிக்கு எதிராக ஆதரவை வாபஸ் பெற்ற முடிவை கைவிடுவதாக தேசிய மக்கள் கட்சி அறிவித்தது. தலைநகர் இம்பாலில் ஆளுநர் நஜ்மாவைச் சந்தித்து பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு அளிப்பதாக 4 எம்.எல்.ஏ.க்களும் தெரிவித்தனர். இதனால், மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு எதிராக எழுந்த அரசியல் சிக்கல் தீர்ந்தது.

click me!