BJP : பாஜகவுக்கு ஓட்டு போட்டால் 50 ரூபாய்க்கு தரமான சரக்கு.. அதிர வைத்த பாஜக தலைவரின் பாட்டில் பேரம்!

Published : Dec 29, 2021, 10:22 PM IST
BJP : பாஜகவுக்கு ஓட்டு போட்டால் 50 ரூபாய்க்கு தரமான சரக்கு.. அதிர வைத்த பாஜக தலைவரின் பாட்டில் பேரம்!

சுருக்கம்

மதுவின் கொள்ளை விலையால் அவை ஏழைகளுக்கு எட்டாமலேயே போகின்றன. வரும் 2024 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஒரு கோடி வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்தீர்கள் என்றால், பாட்டில் மதுவை ரூ.75-க்கு நாங்கள் கிடைக்கச் செய்வோம்.

ஆந்திராவில் பாஜகவுக்கு வாக்களித்தால் 50 ரூபாய்க்கு தரமான மதுவை தருவோம் என்று அம்மாநில பாஜக தலைவர் சோமு வீர்ராஜூ வாக்குறுதியை அளித்துள்ளார். 

ஆந்திராவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இரு தேர்தல்களிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. 2024-இல் மீண்டும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த முறை கணிசமான வெற்றியைப் பெற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அக்கட்சி சார்பில் விஜயவாடாவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மா நில பாஜக தலைவர் சோமு வீர்ராஜா பேசியதுதான் ஹைலைட் ரகம்.

பொதுக்கூட்டத்தில் பேசிய வீர்ராஜூ, ‘‘ஆந்திராவில் நீண்ட கடற்கரை, ஏராளமான இயற்கை வளங்கள் என நிறைய உள்ளன. ஆனாலும், மாநிலத்தை ஆண்ட, ஆளும் கட்சிகளான தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. வரும் தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தால் அமராவதியை தலைநகராக்கி அழகு பார்ப்போம். அடுத்த 3 வருடங்களில் இந்தப் பகுதியை முழுவதுமாக மேம்படுத்திக் காட்டுவோம். ஆந்திராவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை எப்படியும் ஒரு கோடி அளவுக்கு இருக்கும். இவர்கள் ஒவ்வொருவரும் குடிப்பதற்காக சராசரியாக மாதத்துக்கு ரூ.12,000 வரை செலவிடுகிறார்கள். 

மதுவின் பெயரால் உங்கள் பணத்தை பிடுங்கும் அரசு, நலத்திட்டங்கள் பெயரால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செலவு செய்கிறார். அதிலும் தரமற்ற மதுவைத்தான் தருகிறார்கள். மதுவின் கொள்ளை விலையால் அவை ஏழைகளுக்கு எட்டாமலேயே போகின்றன. வரும் 2024 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஒரு கோடி வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்தீர்கள் என்றால், பாட்டில் மதுவை ரூ.75-க்கு நாங்கள் கிடைக்கச் செய்வோம். மாநிலத்தின் நிதி நிலைமை நன்றாக இருந்தால் ரூ.50-க்குக்கூட தரத் தயாராக இருக்கிறோம். அதுவும் தரமான சரக்கு தருவோம்” என்று சோமு வீர்ராஜா பேசினார். ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் என்று வாக்கு கேட்கும் காலத்தில், குறைவான விலையில் சரக்கு வழங்குவோம் என்ற பாஜக  தலைவரின் பேச்சால் ஆந்திரா அதிர்ந்திருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி