குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோகம்... காங்கிரஸை சுருட்டிய வீசிய குஜராத் மக்கள்..!

By Asianet TamilFirst Published Feb 23, 2021, 10:39 PM IST
Highlights

குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
 

குஜராத்தில் பிப்ரவரி 21 அன்று  6 மாநகராட்சிகளில் தேர்தல்  நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ண தொடங்கப்பட்டன. மாலை நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 576 இடங்களில் 334 இடங்களை  பாஜக வென்றது.  அகமதாபாத், சூரத் உள்பட 6  மாநகராட்சிகளையும் பாஜகவே கைப்பற்றியது. இதுவரை காங்கிரஸ் கட்சி 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றியால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.


தேர்தல் முடிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி குஜராத்! மாநகராட்சித் தேர்தல் முடிவுகள், வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் அரசியல் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது.” என்று தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாஜக போட்டியிட்ட 85 சதவீத இடங்களை வென்றுள்ளது. தேர்தலில் காங்கிரஸ் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் முழுவதும் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வென்றது. பாவ்நகர் நகராட்சியில் மட்டும் பாஜக 44 இடங்களை வென்றுள்ளது” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

click me!