தினகரனுக்கு டெல்லியில் இருந்து வந்த ஆர்டர்! டிசம்பருக்குள் முடிவெடுக்க கெடு?

Published : Nov 18, 2018, 10:02 AM IST
தினகரனுக்கு டெல்லியில் இருந்து வந்த ஆர்டர்! டிசம்பருக்குள் முடிவெடுக்க கெடு?

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமி – ஓ.பி.எஸ் தலைமையில் இயங்கி வரும் அ.தி.மு.கவுடன் ஒன்றிணையுமாறு டி.டி.வி தினகரனுக்கு டெல்லி மேலிடம் திடீர் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி என்பதில் பா.ஜ.க மேலிடம் உறுதியாக உள்ளது. தற்போதைய சூழலில் எடப்பாடி – ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்பதால் பெரிய அளவில் நன்மைகள் இல்லை என்பதை பா.ஜ.க மேலிடம் தெரிந்து வைத்துள்ளது. அதே சமயம் டி.டி.வியுடன் இணைந்த அ.தி.மு.க என்றால் தேர்தலில் ஓரளவு பலன் அடைய முடியும் என்று பா.ஜ.க கணக்கு போடுகிறது.

ஆனால் டி.டி.விக்கோ பா.ஜ.க என்றால் வேப்பங்காயாக கசக்கிறது. எனவே பா.ஜ.கவிடம் இருந்து சில நூறு அடிகள் தள்ளியே நிற்கிறார் டி.டி.வி. கடந்த இரண்டு மாத காலமாகவே அ.தி.மு.கவுடன் டி.டி.வியை சேர்த்துவிட டெல்லி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முட்டுக்கட்டை போட்ட அ.தி.மு.க பிரமுகர்களுக்கு எல்லாம் டெல்லி செக் வைத்து தயார் செய்துள்ளது.

ஆனால் டி.டி.வியோ இணைய வேண்டும் என்றால் நீங்கள் தான் எங்களுடன் வந்த இணைய வேண்டும் என்று அ.தி.மு.க தரப்புக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்க வேண்டும், தன்னை துணை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும், ஓ.பி.எஸ், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்கமார் ஆகியோர் அமைச்சர்களாக நீடிக்க கூடாது என ஏகப்பட்ட கண்டிசன்களையும் டி.டி.வி முன்வைப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் டெல்லியோ தாங்கள் சொல்லும் டெர்ம்ஸ் அன்ட் கன்டிசனுக்கு ஒப்புக் கொண்டு அ.தி.மு.கவில் இணைந்தால் பிரச்சனை இல்லை, மாறாக நடந்து கொண்டால் வழக்கு, கைது என்று சிக்கல் தான் என்று டி.டி.வியை மிரட்டி வந்துள்ளது. ஆனால் அதற்கெல்லாம் பிடி கொடுக்காமல் டி.டி.வி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தான் டெல்லியில் பாட்டியாலா நீதிமன்றம் டி.டி.விக்கு எதிராக அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனை இந்த நேரத்தில் டி.டி.வி சற்றும் எதிர்பார்க்கவில்லை. பா.ஜ.க சொல்கிறபடி கேட்டு அ.தி.மு.கவில் இணைந்தால் தேர்தல் வரை தன்னை பயன்படுத்திவிட்டு பின்னர் கறிவேப்பிலை போல் தூக்கி வீசிவிடுவார்கள் என்பது டிடிவிக்கு நன்கு தெரிந்துள்ளது. இதனால் தான் அவர் அ.தி.மு.கவோடு இணைவதை தவிர்த்து வருகிறார். ஆனால் டெல்லியோ டிசம்பருக்குள் சாதகமான முடிவை எடுக்கவில்லை என்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றால் சொல்லாமல் செல்லியுள்ளதாக கூறுகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்